twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்... சத்யராஜ் மகள் திவ்யா விளக்கம்!

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன் என்பது குறித்து நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விளக்கம் அளித்துள்ளார்.

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அவர் சமீபத்தில், மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல் மற்றும் அதில் உள்ள குறைபாடுகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

    Politics was not discussed in this meeting with Stalin: Divya Sathyaraj

    திமுக தலைவர் ஸ்டாலினை, திவ்யா சத்யராஜ் சமீபத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் திமுகவில் இணையப் போவதாக செய்தி வெளியானது.

    இதுகுறித்து விளக்கமளித்துள்ள திவ்யா, ஸ்டாலினுடனான சந்திப்பின் போது பேசப்பட்டது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து அவர் கூறியதாவது, " எனது தந்தை சத்யராஜ், கலைஞரின் இயக்கத்தில் நடித்ததில் இருந்தது, எங்கள் இரண்டு குடும்பத்துக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது.

    இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையையும், அவர்களது ஆரோக்கியத்தை மேம்படுத்து குறித்தும் என்னிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. அது குறித்து அவரிடம் ஆலோசித்தேன்.

    ஸ்டாலின் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார். அவர் மீது நான் நிறைய மரியாதை வைத்துள்ளேன். எனக்கு அரசியல் ஆர்வம் இருப்பது உண்மை தான். ஆனால் இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.

    தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பிரிவில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, இரும்பு சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இதனால் ரத்த சோவை நோய் ஏற்படுகிறது. எனவே இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தான் ஸ்டாலின் அவர்களுடன் நிறைய பேசினேன்", என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

    English summary
    “Our families have been friends ever since my father acted in Kalaignar Sir’s direction. It was an informal meeting...I spoke to him about my career as a nutritionist and the projects that I am planning to improve health and nutrition of children in Tamil Nadu, Stalin sir was very encouraging, I have a lot of respect for Stalin Sir and his journey as a politician. I am interested in politics but I would like to emphasise on the fact that politics was not discussed in this meeting”, Says Divya Sathyaraj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X