twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி கொடூரம்: கமல் கேட்டது கேள்வின்னு நினைத்தீர்களா, அது தான் இல்லை

    By Siva
    |

    Recommended Video

    பொள்ளாச்சி சம்பம் பற்றி திரைபிரபலங்கள் கருத்து- வீடியோ

    சென்னை: பொள்ளாச்சி பயங்கரம் தொடர்பாக கமல் ஹாஸன் வெளியிட்ட வீடியோவால் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது.

    பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. அதில் ஒரு வீடியோ வெளியாகியும் இந்த பயங்கரத்தை கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    டெல்லியில் நிர்பயாவுக்காக பொங்கிய தேசிய ஊடகங்கள் நம் பொள்ளாச்சி பெண்கள் விஷயத்தை பேச மாட்டோம், கேட்க மாட்டோம், பார்க்க மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றன.

    லிடியன் நாதஸ்வரம் : ரூ. 7 கோடி வென்ற சென்னை சிறுவனின் மதம், சாதியை கூகுளில் தேடும் மக்கள் லிடியன் நாதஸ்வரம் : ரூ. 7 கோடி வென்ற சென்னை சிறுவனின் மதம், சாதியை கூகுளில் தேடும் மக்கள்

    கைது

    கைது

    பொள்ளாச்சி விவகாரத்தில் ஆதாரம் உள்ளது. இருப்பினும் 20 பேர் கொண்ட கும்பலில் வெறும் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டது ஏன்?. இவ்வளவு பெரிய கொடுமையை சில தமிழ் ஊடகங்களே புறக்கணிப்பது ஏன் என்று மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது.

    கமல் ஹாஸன்

    கமல் ஹாஸன்

    பொள்ளாச்சி பயங்கரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் வெளியிட்ட வீடியோ தான் மக்களின் கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பதில்கள்

    கமல் ஹாஸன் தான் வெளியிட்ட வீடியோவில் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் அந்த கேள்விகள் மூலம் மக்களுக்கு பல பதில்கள் கிடைத்துவிட்டது. இதற்கு கமலுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

    பாராட்டு

    பாராட்டு

    தமிழக அரசை துணிந்து கேள்விகள் கேட்டுள்ள கமல் ஹாஸனை பலரும் பாராட்டியுள்ளனர். சிலரோ, சார் நீங்க கேட்டாலும் பதில் கிடைக்காது, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    MNM chief Kamal Haasan's video about Pollachi rapes has cleared people's doubts about the issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X