twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி கொடுமை: இப்படி எல்லாம் பப்ளிக்கா உண்மையை சொல்லக் கூடாது பிரசன்னா

    By Siva
    |

    Recommended Video

    நீதி கிடைக்குமா!!!.. பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது- திரைபிரபிலங்கள்

    சென்னை: பொள்ளாச்சி கொடூரம் குறித்து சரியாக சொல்லியுள்ளார் நடிகர் பிரசன்னா.

    பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. அந்த கொடுமையை செய்த 20 பேரில் 16 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.

    பொள்ளாச்சி பெண்ணின் அலறலை கேட்டு ஈரக்குலை நடுங்குது: சேரன், பார்த்திபன், வரலட்சுமி பொள்ளாச்சி பெண்ணின் அலறலை கேட்டு ஈரக்குலை நடுங்குது: சேரன், பார்த்திபன், வரலட்சுமி

    பிரசன்னா

    தேர்தல் நாடகங்கள் மீது அனைவரின் கவனமும் இருப்பது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது என்கிறார் பிரசன்னா.

    விஜயலட்சுமி


    யோசிக்கவே வேணாம்.
    நிக்க வெச்சு சுடுங்க.
    Live telecastல.
    பயம் வரட்டும்.
    பணபலம்,அதிகாரம்,வயசு,குரூர மனசுனு இந்த காம்பினேஷன்ல கால தூக்கி காட்ற கருமாந்ரோலா பயத்துல பொத்திகிட்டு பொழப்ப பாக்கனும்
    உயிர் பயம் வந்தா தான் உருப்படுவான்க.
    போட்ருங்க சார்.
    உடனே.!!!
    #PollachiSexualAbuse என்று ட்வீட் செய்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

    ஆரவ்

    பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த ஆண்களை மிருகங்களுடன் ஒப்பிடக் கூடாது. ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோன்று மோசமான ஆட்களை பார்த்தது இல்லை. அவர்கள் வாழத் தகுதி இல்லாதவர்கள் என்கிறார் ஆரவ்.

    வைபவ்

    பொள்ளாச்சி சம்பவங்கள் பற்றி படித்துவிட்டு இதயம் நொறுங்கிவிட்டது. கோபத்தை விட பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பற்றி தான் நினைப்பாக உள்ளது. தடைகளை தாண்டி வர ஆண்டவன் அவர்களுக்கு சக்தியை கொடுக்கட்டும் என்று நடிகர் வைபவ் ட்வீட் செய்துள்ளார்.

    English summary
    Actor Prasanna tweeted that, 'It's sad n shame whole attention is only on the election dramas'. He tweeted so about Pollachi sexual assault case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X