பொள்ளாச்சி பயங்கரம் எதிரொலி: பிரசன்னா போன்று செய்ய எத்தனை பேர் தயார்?
Recommended Video

சென்னை: நடிகர் பிரசன்னா கூறியது போன்று அனைவரும் செய்தால் நன்றாக இருக்கும்.
பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை 20 பேர் கொண்ட பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியும் தேசிய ஊடகங்களும், சில தமிழ் ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தேர்தல் நேரம் என்பதால் பொள்ளாச்சி விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என்று நடிகர் பிரசன்னா சரியாக ட்வீட் செய்தார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
பிரசன்னா
ஒரு பெண்ணை மரியாதையுடன் எப்படி நடத்த வேண்டும் என்று என் மகனுக்கு கற்றுக் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன் என்ற வாசகத்தை ட்விட்டர் ப்ரொஃபைல் பிக்சராக வைத்துள்ளார் பிரசன்னா.

பிள்ளைகள்
பெற்றோர் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துவதால் ஆண் பிள்ளைகள் வழி தவறி செல்கின்றனர். ஒரு பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்று ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கண்டிப்பாக கற்றுத் தர வேண்டும். இந்த மாற்றம் வீட்டில் இருந்து தான் துவங்கப்பட வேண்டும்.
சத்தியம்
சூழலை எப்படி எதிர்கொள்வது என்று என் மகளுக்கு நான் கற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன் என ஒருவர் பிரசன்னாவின் ட்வீட்டை பார்த்துவிட்டு கமெண்ட் போட்டுள்ளார்.

பாடம்
இக்கட்டான சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள பெண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தற்போது கூட பாதிக்கப்பட்ட பெண்களை குறை சொல்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











