twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி பெண்ணின் அலறலை கேட்டு ஈரக்குலை நடுங்குது: சேரன், பார்த்திபன், வரலட்சுமி

    By Siva
    |

    Recommended Video

    நீதி கிடைக்குமா!!!.. பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது- திரைபிரபிலங்கள்

    சென்னை: பொள்ளாச்சி சம்பவம் குறித்து திரையுலக பிரபலங்கள் குரல் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.

    பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 20 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த 20 பேரில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த கொடூரத்தை கண்டித்து திரையுலக பிரபலங்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

     4 நாளில் நிச்சயதார்த்தம்: இந்நேரம் பார்த்து விஷாலுக்கு இப்படி ஆகிவிட்டதே! 4 நாளில் நிச்சயதார்த்தம்: இந்நேரம் பார்த்து விஷாலுக்கு இப்படி ஆகிவிட்டதே!

    தண்டனை

    பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்கச் செய்தது!
    இவ்வன்முறை வருடம் ஒரு முறை வந்தது போய், மாதம்இருமுறையும், வாரம் ஒரு முறையுமாய் வருவது, நீதிமன்றத்தின் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளால் மட்டுமே மட்டு படுத்தப்படும்! என்கிறார் பார்த்திபன்.

    சேரன்

    பொள்ளாச்சி சம்பவத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடுமின்றி இளம்பெண்களை சீரழித்த அனைவருக்கும் சட்டப்படி தண்டனை கிடைக்கவேண்டும்.. (இந்த விசயத்தில் நாம் அரேபிய சட்டத்தை பின்பற்றலாம்) மாறாக எது நடந்தாலும் எதிர்த்துப்போராட அனைத்து பெற்றோர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் ட்வீட் செய்துள்ளார்.

    ரீட்வீட்

    "உன்னை நம்பித்தானே வந்தேன்?" என்றும், "அடிக்காதிங்க, லெக்கிங்க்ஸை கழட்டுர்றேன்" என்று அந்தப்பெண் அழும் போது ஈரக்குலையெல்லாம் நடுங்குகிறது. கண்ணை மூடி சரமாரியாக வாள் வீசி கழுத்தறுத்து போடுமளவான கோவம் அந்தப்பொறுக்கிகள் மேல் உற்பத்தியாகிறது. #ArrestPollachiRapists என்று ஒருவர் ட்வீட்டியதை ரீட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சேரன்.

    வரலட்சுமி சரத்குமார்

    பொள்ளாச்சி கொடூரன்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறி குமுறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

    English summary
    Kollywood celebrities want Pollachi rapists to be sentenced to death.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X