twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி பயங்கரம்: இம்முறை நிஜமாகவே விஷால் ஆவேசம்

    By Siva
    |

    Recommended Video

    பொள்ளாச்சி சம்பம் பற்றி திரைபிரபலங்கள் கருத்து- வீடியோ

    சென்னை: பொள்ளாச்சி விவகாரம் குறித்து ஒரு வழியாக பேசியுள்ளார் விஷால்.

    பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் 200 பேர் 20 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி பயங்கரம் குறித்து அமைதியாக இருந்த விஷால் தற்போது தான் வாய் திறந்துள்ளார்.

    பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக் பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்

    விஷால்

    பொள்ளாச்சி குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார் விஷால்.

    அயோக்யா

    அயோக்யா

    முன்னதாக விஷால் நடித்து வரும் அயோக்யா படத்தில் அவர் ஆவேசமாக பேசிய வசன வீடியோவை பி.ஆர்.ஓ.க்கள் ட்விட்டரில் வெளியிட்டு நீக்கினார்கள். அந்த வீடியோவை பார்த்த மக்கள் இந்த நேரத்தில் கூட படத்திற்கு விளம்பரம் தேடுவீங்களா என்று விஷாலை வறுத்தெடுத்தனர்.

    கண்டனம்

    கண்டனம்

    பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஊரே பேசிக் கொண்டிருக்கும்போது விஷால் தாமதமாக கருத்து தெரிவித்துள்ளார். ஒரு வருங்கால ச.ம.உ.(சட்டமன்ற உறுப்பினர்) இப்படியா லேட்டாக கண்டனம் தெரிவிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ரசிகர்கள்

    பொள்ளாச்சி பயங்கரம் குறித்து விஷால் ட்வீட் போட்டதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து நீங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும் அண்ணா என்கிறார்கள்.

    English summary
    Actor Vishal tweeted, 'Ders a time wen we look up 2 real life incidents Wer the criminals r duly punished immdtly 4 the crime committed.whoever they mayb n however powerfully connected they mayb.i sincerely wish justice prevails n punish the pollachi rapists.death penalty to them.nthn more r nthn less.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X