twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி கொடூரம்: தைரியமாக உண்மையை சொல்லும் சின்மயி

    By Siva
    |

    Recommended Video

    நீதி கிடைக்குமா!!!.. பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது- திரைபிரபிலங்கள்

    சென்னை: பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் எதையும் வெளியே கூறாமல் இருக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்த கும்பலில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏகப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் கிடைத்துள்ளது.

    பொள்ளாச்சி விவகாரம் குறித்து தைரியமாக ட்வீட் செய்து வருகிறார் சின்மயி.

    பொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர் பொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர்

    பெண்கள்

    பொள்ளாச்சி பலாத்காரம் பற்றி படித்த பிறகு ஏன் பலரும் ஒரு நிலையை எடுக்கவில்லை என்பதில் ஆச்சரியமே இல்லை. பெண்கள் முன்னேற்றம், பெண்களின் பாதுகாப்பு எல்லாம் பேச நன்றாக இருக்கிறது. ஆனால் நிஜத்தில்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.

    சின்மயி

    பொள்ளாச்சி பலாத்காரத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை தைரியமாக ட்வீட் செய்திருக்கிறார் சின்மயி.
    #PollachiGangRape

    தேசிய மீடியா

    பொள்ளாச்சியில் இப்படி ஒரு கொடூரம் நடந்தும் தேசிய ஊடகங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் சமூக வலைதளங்களில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் பொள்ளாச்சி விவகாரம் பற்றி ட்வீட் செய்தால் தேசிய ஊடகங்களின் கவனத்தை பெற முடியும் என்கிறார் சின்மயி.

    அமைதி

    பாதிக்கப்பட்ட பெண்கள் அமைதி காக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது. நீதி விசாரணை வேண்டும் என்று கேளுங்கள். நீதி விசாரணை நடத்தினால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வந்து பேசுவார்கள் என்று சின்மயி ட்வீட் செய்துள்ளார். #JudicialProbeForPollachiRapes

    English summary
    Singer Chinmayi tweeted that, 'There is a lot of pressure on the women to not speak out. Ask for #JudicialProbeForPollachiRapesIf it is judicial probe, victims will have more confidence in coming out.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X