twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர்

    By Siva
    |

    Recommended Video

    நீதி கிடைக்குமா!!!.. பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது- திரைபிரபிலங்கள்

    சென்னை: பொள்ளாச்சியில் காமக்கொடூரன்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதறலை கேட்டு தனது இதயம் நொறுங்கிவிட்டதாக நடிகர் கதிர் ட்வீட் செய்துள்ளார்.

    பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் நட்பாகி அதில் 200 பேரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அதில் ஒரு இளம் பெண் அந்த கும்பலிடம் சிக்கி கத்திக் கதறும் வீடியோ வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவை பார்ப்பவர்களின் நெஞ்சம் பதறாமல் இருக்க முடியாது.

     ரூ. 1 லட்சம் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை: நடிகர் மீது சூர்யா ஹீரோயின் புகார் ரூ. 1 லட்சம் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை: நடிகர் மீது சூர்யா ஹீரோயின் புகார்

    கதிர்

    மனித உருவில் இருக்கும் அந்த மிருகங்களுக்கு கருணையே காட்டக் கூடாது, ஆதரவும் கூடாது. அந்த பெண்ணின் குரலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது என்று ட்வீட் செய்துள்ளார் கதிர். #PollachiSexualAbuse

    ஆண்கள்

    பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண் பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை என்கிறார் இயக்குநர் கரு. பழனியப்பன்.

    ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின் தனது அப்பா ட்வீட் செய்ததை மட்டும் ரீட்வீட் செய்துள்ளார்.

    எங்கே?

    எங்கே?

    சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள் என்று தையா, தக்கா என்று குதிக்கும் சில பிரபலங்கள் எல்லாம் பொள்ளாச்சி விஷயத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Kathir tweeted, 'No mercy!! No Support!! for the animals in the human form.. Listening to the voice of the girl has broken the heart. Punishment should create a change for the heartless humans.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X