twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத் தேர்தல்... பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த வாக்குப்பதிவு!

    |

    Recommended Video

    Nadigar Sangam Election:வாக்குகளை பதிவிட்ட முத்த நடிகைகள்

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி பத்மநாபன் முதலில் அறிவித்தார். ஆனால் உறுப்பினர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தை காரணம் காட்டி, தேர்தலை ரத்து செய்தார் மாவட்ட சங்கங்கள் பதிவாளர்.

    Polling started for Nadigar sangam election 2019

    இதையடுத்து விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடத்த அனுமதி. ஆனால் முன்னர் அறிவித்தது போல் சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் சென்னை மந்தவெளியில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று தேர்தல் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்களித்தார்கள். தேர்தல் நடைபெற்ற பள்ளி வளாகத்தில், பல நிபந்தனைகளுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு அணிகளுக்குமே சமநிலையில் ஆதரவு உள்ளது.

    மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறும். இம்முறை 2019-2022ம் ஆண்டுக்கான தேர்தல். மொத்த வாக்குகள் 3644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எண்ணிக்கை 3171 என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The polling for Nadigar sangam election 2019 started today at 7 am in St.Ebbas schoo, Mandhaveli, Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X