போலீஸ் அதிகாரியாக மிரட்டும் பிரபுதேவா.... பொன் மாணிக்கவேல் டிரைலர் வெளியானது !

சென்னை : பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக

போலீஸ் அதிகாரியாக

தேவி, குலேபகாவலி, மெர்க்குரி, சார்லி சாப்ளின் 2 என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. தற்போது இவர், உருவாகி இருக்கும் படம் 'பொன் மாணிக்கவேல்'. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில், பிரபுதேவா முதல்முறையாக போலீசாக அதிகாரியாக நடித்துள்ளார்.

இசையமைத்துள்ளார்

இசையமைத்துள்ளார்

இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், பிரபல இயக்குனரும் நடிகருமான ஜெ. மஹேந்திரன் இப்படத்தில் நடித்துள்ளார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஆக்‌ஷன் திரைப்படம்

ஆக்‌ஷன் திரைப்படம்

ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. ஆனால், கொரோனாவின் தாக்கம் திரையரங்கு மூடப்பட்டதால் படம் வெளியாவது தள்ளிப்போனது. இதையடுத்து, பொன் மாணிக்கவேல் திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

டிரைலர்

டிரைலர்

இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதில், 12 மணி நேரத்திற்குள்ள கொலை செய்வதா ஒருத்தன் மிரட்டி இருக்கான்...யார் அவன் என்ற பதற்றத்துடன் டிரைலர் தொடங்குகிறது. பாய்ந்து வரும் ஜீப்பில் போலீஸ் உடையில் கெத்தாக வந்து இறங்குகிறார் பிரபுதேவா. மர்டர், ஆக்ஷன், த்ரில்லிங் என டிரைலர் செம மாஸாக உள்ளது.

பஹிரா

பஹிரா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா பஹிரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அமிரா தஸ்தூர், காயத்ரி சங்கர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. மேலும், கருப்பு ராஜா வெள்ளை ராஜா, ஊமை விழிகள், விநோதன் ஆகிய படங்களில் பிரபுதேவா நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X