கடைசி நேரத்துல கேன்சல்.. இது என்னய்யா அவருக்கு வந்த சோதனை.. எல்லாம் அந்த பிரச்சனைதான் காரணமாம்!

சென்னை: பிரபு தேவா நடித்துள்ள பொன்மாணிக்கவேல் படம் இன்றும் ரிலீஸ் ஆகவில்லை.

தமிழ் சினிமாவில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. வெள்ளிக்கிழமையான இன்றும் பல படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.

எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இம்சை அரசி, காலேஜ் குமார், வெல்வெட் நகரம், ஈவர் கரவாது, இந்த நிலை மாறும், முரட்டு சிங்கம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.

ரிலீஸில் சிக்கல்

ரிலீஸில் சிக்கல்

இதனிடையே நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா நடித்துள்ள பொன்மாணிக்கவேல் படம் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் படம் வெளியிடப்படுவது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டது. பொன்மாணிக்கவேல் படம் கடைசி நேரத்தில் பண விவகாரத்தால் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வியாபாரம் ஆகவில்லை

வியாபாரம் ஆகவில்லை

சில இடங்களில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் ஆகாமல் இழுபறியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழுவினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

தபாங் 3 படம்

தபாங் 3 படம்

பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டைரக்டர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நடிகர் பிரபு தேவா, தற்போது தேள், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் சல்மான்கானை வைத்து பிரபுதேவா இயக்கிய தபாங்-3 படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

தற்போது மீண்டும் சல்மான்கான் நடிக்கும் ராதே படத்தை இயக்கி வருகிறார் பிரபு தேவா. இந்நிலையில் இன்று ரிலீஸ் ஆகும் என விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் பொன்மாணிக்க வேல் படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பது படக்குழுவினரை கவலையடைய செய்திருக்கிறது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தேவையான வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X