பொங்கல் 2018: ​விக்ரம், விஷால், விமல்.... மூன்று ’வி’க்களுடன் மோதும் சூர்யா!

By Shankar

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் விக்ரமின் ஸ்கெட்ச் படமும்தான் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக பொங்கல் போட்டியில் விஷாலும் விமலும் குதித்துள்ளார்கள்.

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம். ஒரு இளைஞன் அரசியலால் பாதிக்கப்பட்ட கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியலுக்கு எதிராக போராடுவதுதான் கதை என்கிறார்கள். இந்த படம் வெகு நாட்களாக எடுத்துக்கொண்டே இருப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் விக்கி மீது செம காண்டில் இருக்கிறார்கள். ஒரு வழியாக பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Pongal 2018 Schedule

இதேபோல் விக்ரம் நடிக்க வாலு இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் ஸ்கெட்ச் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம் என்று இண்டஸ்ட்ரி பேசிக்கொள்வதால் இருவரது மோதலையும் குறித்து எதிர்பார்ப்பு எகிறியது.

இந்நிலையில் இந்தப் போட்டியில் விஷாலின் இரும்புத்திரை படமும் விமலின் மன்னர் வகையறா படமும் குதித்துள்ளன.

இரண்டுமே அந்தந்த ஹீரோக்களின் சொந்தத் தயாரிப்புகள். நான்கு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதற்கு இங்கே தியேட்டர்கள் இல்லை. எனவே ஏதாவது ஒரு படமாவது பின்வாங்கும் வாய்ய்பும் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X