ஷங்கருடன் மோத தயாரில்லை.. சைலன்ட்டான வீர தீர சூரன்.. பொங்கல் 2025க்கு இத்தனை படங்கள் வருதா?

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விடாமுயற்சி வரப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யாவின் ரெட்ரோ, சியான் விக்ரமின் வீர தீர சூரன் உள்ளிட்ட பல படங்கள் பின்வாங்கி விட்டன. ஆனால், கடைசி நேரத்தில் பொங்கலுக்கு வர முடியாத சூழல் உருவாகி விட்டதாக விடாமுயற்சி படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்கள் வெளியாகாமல் சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள் வெளியாகி ரசிகர்கள் செம அப்செட் ஆகிவிட்டனர். அதே நிலைமை தான் தற்போது இந்த ஆண்டு பொங்கலுக்கும் ஏற்படப் போகிறது என நினைத்து தியேட்டர் ஓனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

pongal 2025 game changer kadhalikka neramillai 2025


ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துடன் மோத ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படத்துடன் பல சிறிய பட்ஜெட் படங்கள் இந்த பொங்கல் பண்டிகையை குறிவைத்துள்ளன. எந்த எந்த படங்கள் பொங்கலுக்கு வெளியாகிறது என்கிற முழுப் பட்டியலை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஷங்கருடன் மோத வேண்டாம்: அந்நியன், ஐ என ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் 2 சூப்பரான படங்களில் நடித்துள்ளார். அதே போல சேது, பிதாமகன் படங்களை இயக்கிய பாலாவின் வணங்கான் படமும் பொங்கலுக்கு வரும் நிலையில், விடாமுயற்சி கேப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் திட்டமிட்டபடியே குடியரசு தினத்தை குறிவைத்து வரலாம் என்கிற முடிவிலேயே வீர தீர சூரன் இருப்பதாக கூறுகின்றனர்.

ஜெயம் ரவிக்கு ஜெயம் கிடைக்குமா?: விடாமுயற்சி விலகிய நிலையில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தை கிராண்ட் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ள இந்த படம் நிச்சயம் காதலர்களை கவரும் விதமாக காதலர் தினத்துக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையே கிடைத்தால் விட்டு விடுவேனா என ரிலீஸ் ஆகிறது. கடந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு தோல்வி முகமாக இருந்த நிலையில், காதலிக்க நேரமில்லை வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாகரத்தான ஜெயம் ரவி மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி காதலிக்க நேரமில்லை என்பதை வெளிப்படையாக சொல்லக் காத்திருக்கிறது.

பொங்கல் ரிலீஸ் லிஸ்ட்: இந்த ஆண்டு பொங்கலுக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் தான் பெரிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது தெலுங்கு படமாக கருதப்படும் நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் மொத்த படங்களின் லிஸ்ட்டை இங்கே பார்க்கலாம்.

1. கேம் சேஞ்சர்
2. வணங்கான்
3. காதலிக்க நேரமில்லை
4. படைத் தலைவன்
5. மெட்ராஸ்க்காரன்
6. டென் ஹவர்ஸ்
7. நேசிப்பாயா
8. தருணம்

என ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த பொங்கல் ட்ரீட்டாக 8 படங்கள் அணிவகுத்துக் காத்துக் கிடக்கின்றன. இதில், ரசிகர்களை அதிகம் கவர்ந்து பொங்கல் விடுமுறை பாக்ஸ் ஆபிஸை வெல்லப்போவது யாரு என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். பாலாவின் வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்துக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக ஒன்றுக் கூட கோலிவுட்டில் இல்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X