“கட்டில்“ படக்குழுவினருடன் பொங்கலை கொண்டாடிய.. சிருஷ்டிடாங்கே
சென்னை : கட்டில் படத்தின் கதாநாயகியான சிருஷ்டிடாங்கே படக்குழுவினரோடு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார்.
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் "கட்டில்" திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.

படப்பிடிப்பின் போது "கட்டில்" திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை "கட்டில்" படத்தின் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டிடாங்கே மற்றும் படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
மர்ம தேசத்தின் மூலம் உலக தமிழர்களால் அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழகத்தின் முன்னணி ஓவியரான ஷ்யாம் கதாநாயகனுக்கு அண்ணனாக இப்படத்தில் களமிறங்குகிறார்.

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் உட்பட பல பிரபலங்கள் கட்டிலின் மூலமாக நடிகராக அறிமுகமாகி உள்ளனர். பிலெனின் கதை, திரைகதை, வசனம், எடிட்டிங் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுள்ளார். வைட்ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மெட்டி ஒலி சாந்தி இப்படத்திற்கு நடனம் அமைத்திருக்கிறார்.
இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் "கட்டில்" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என இ.வி.கணேஷ்பாபு கூறினார்.


Click it and Unblock the Notifications











