twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குலேபகாவலி ஆடிய அதிரடி ஆட்டம்... ஸ்கெட்ச் போட்டு பக்காவாக நிற்கும் கலைப்புலி தாணு!

    By Shankar
    |

    தமிழ் சினிமா வசூல் கணக்கில் தீபாவளியை விட முக்கிய பண்டிகை பொங்கல். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறைவாகவும் வட மாவட்டங்களில் அதிகமாகவும் இந்த சீசனில் சினிமா வசூல் இருக்கும்.

    பாஸ்கர் ராஸ்கல், மதுரவீரன், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, மன்னர் வகையறா என ஆறு படங்கள் ஜனவரி 12 அன்று வெளிவரும் என்று கூறப்பட்டு வந்தது.

    தானா சேர்ந்த கூட்டம்

    தானா சேர்ந்த கூட்டம்

    தியேட்டர்கள் முன்னுரிமை கொடுத்து திரையிட விரும்பிய படம் தானா சேர்ந்த கூட்டம் வருமா வராதா என்ற சந்தேகத்தில் ஏரியா வியாபாரம் நடப்பதில் தேக்க நிலை இருந்தது. பிற படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைப்பதில் குழப்பம் நிலவியது.

    400 ஸ்கிரீன்ஸ்

    400 ஸ்கிரீன்ஸ்

    தானா சேர்ந்த கூட்டம் பஞ்சாயத்து முடிக்கப்பட்டு ரீலீஸ் உறுதி செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 9 ஏரியாவும் வியாபாரம் முடிந்தது. அடுத்த 48 மணி நேரத்தில் 400க்கும் அதிகமான தியேட்டர்களில்தானா சேர்ந்த கூட்டம் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    தடுமாற்றம்

    தடுமாற்றம்

    எஞ்சியுள்ள 600 திரையரங்குகளை மற்ற 5 படங்களும் பங்கிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிற படங்கள் விநியோகஸ்தர்களை நியமிப்பதில் தடுமாற்றத்தில் இருந்தன. கடைசி நேரத்தில் குலேபகாவலி ரிலீஸ் தேதி மாறும் என கூறி வந்தனர்.

    குலேபகாவலி

    குலேபகாவலி

    இந்நிலையில் தமிழ்நாட்டில் முண்ணனி விநியோகஸ்தர்களிடம் குலேபகாவலி உரிமையை தயாரிப்பாளர் வழங்கினார். புத்திசாலித்தனமாக தயாரிப்பு தரப்பு எடுத்த முடிவால் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் ஒப்பந்தம் போடப்பட்டு விட்டன. குலேபகாவலி தயாரிப்பாளர் கையாண்ட அதிரடி முடிவால் மதுர வீரன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பொங்கல் போட்டியிலிருந்து விலகிவிட, மன்னர் வகையறா தணிக்கை ஆகாததால் அதுவும் ஆட்டத்தில் இல்லை.

    பிரதான போட்டி

    பிரதான போட்டி

    பொங்கல் போட்டியில் பிரதான போட்டியை ஏற்படுத்தியுள்ள குலேபகாவலி பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, யோகி பாபு நடித்துள்ள காமெடி படம். கதை திரைக்கதை வசனம் எழுதி கல்யாண் இயக்கி உள்ள இப்படத்தை கேஜெஆர் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

    ஸ்கெட்ச்

    ஸ்கெட்ச்

    அடுத்து ஸ்கெட்ச். பொங்கல் படங்களில் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்துக்கு எந்த குழப்பமும் இல்லை. காரணம் படத்தை வெளியிடும் கலைப்புலி தாணுவின் அனுபவம். மிக நேர்த்தியாக திட்டமிட்டு படத்தை வெளியிடுகிறார். இந்த பொங்கல் சூர்யா - விக்ரம் - பிரபு தேவா ஆகியோருக்கிடையிலான ரேசாக மாறியுள்ளது.

    English summary
    Here is the Release positions of Pongal movies 2018.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X