»   »  இந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்

இந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்த பொங்கலை லேடி சூப்பர் ஸ்டாரின் நடிப்போடு கொண்டாடுங்கள்- வீடியோ

சென்னை: இந்த பொங்கல் பண்டிகையை சூப்பர் ஸ்டார் மற்றும் லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்.

புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். புத்தாண்டு பிறந்த இரண்டு வாரங்களில் பொங்கல் திருநாள் வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் தற்போதே திட்டமிடுகிறார்கள்.

பொங்கல் பண்டிகை என்றால் டிவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு குறைவிருக்காது.

ஞாயிறு

ஞாயிறு

பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. போயும் போயும் ஞாயிற்றுக்கிழமையா பண்டிகை வருவது. திங்கட்கிழமை வந்திருந்தால் கூடுதலாக ஒரு நாள் லீவு கிடைத்திருக்குமே என்று பலர் வருத்தப்படுகின்றனர்.

ரஜினி

ரஜினி

இந்த பொங்கல் சன் டிவியில் சூப்பர் ஸ்டார் பொங்கல் ஆகும். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்த கபாலி படம் பொங்கல் அன்று ஒளிபரப்பாகிறது.

நயன்தாரா

நயன்தாரா

மாட்டுப் பொங்கல் அன்று சன் டிவியில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அறம் படம் ஒளிபரப்பாகிறது. கலெக்டர் மதிவதனியாக நயன்தாரா நடிப்பால் மிரட்டியிருந்தார்.

தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

இந்த பொங்கலுக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸாகிறது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் தவமாய் தவமிருக்கிறார்கள்.

English summary
Rajinikanth starrer Kabali and Nayanthara's Aramm will be telecasted in Sun TV as part of Pongal special programmes. TN people are getting ready to celebrate Pongal festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X