பிக்பாஸ் வீட்டில் புத்தாடை அணிந்து பொங்கல்...மொத்த போட்டியாளர்களும் மகிழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களில் வெளியேற்றப்பட்டவர்களில் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைக்கப்பட புத்தாடை அணிந்து தமிழர் மரபுப்படி பொங்கலை படைத்து வழிபட்டனர்.

தீபாவளி, பொங்கல் விழா, புத்தாண்டு விழாக்களை கண்ட பிக்பாஸ்
பிக்பாஸ் சீசன் 1,2,3 ஜூன் மாதங்களில் நடந்தது அப்போது பண்டிகைகள் பெரும்பாலும் குறிக்கிட்டதில்லை. ஆனால் கொரோனா காலகட்டத்தில் பிக்பாஸ் தள்ளிப்போக பெரும்பாலும் போட்டியாளர்கள் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு பிக்பாஸ் சீசந்5 போட்டியாளர்களில் வெளியேற்றப்பட்டவர்கள் தவிர மீதி 5 பேர் வீட்டில் இருந்தனர்.

5 பேர் தவிர அனைவரும் கூடிய பிக்பாஸ் இல்லம்
போட்டி முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை போட்டியாளர்கள் சந்தோசமாக கொண்டாடும் விதத்தில் வெளியில் சென்ற போட்டியாளர்களையும் வரவழைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார் பிக்பாஸ். இதையொட்டி பெரும்பாலான போட்டியாளர்கள் வீட்டுக்கு திரும்பியிருந்தனர். சின்னப்பொண்ணு, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, ஐக்கிபெர்ரி, அபிஷேக் தவிர மற்ற அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

தாமரையின் மேற்பார்வையில் பொங்கல்
பொங்கல் பண்டிகையை ஒட்டி தாமரையின் மேற்பார்வையில் பொங்கலை கூட்டாக செய்தனர். சமையல் உதவியை நிரூப், அபினய் செய்தனர். அனைவரும் பூஜை செய்து பொங்கல் பொங்கி வரும் நேரத்தில் பொங்கலோ பொங்கல் என உச்சரித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். அனைவரும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்திருந்தனர்.

வாழை இலைப்போட்டு சாப்பாடு
பூஜை செய்து பிரசாதம் வழங்கி, நெற்றியில் திலகமிட்ட தாமரையின் காலில் விழுந்து சிலர் வணங்கினார்கள், முக்கியமாக பிரியங்கா தாமரையின் காலில் விழுந்து வணங்கினார். பின்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வழங்கப்பட்ட சாம்பார், ரசம், தயிர், அப்பளம், கூட்டுப்பொறியல் அடங்கிய உணவை வாழை இலைப்போட்டு அனைவரும் சாப்பிட்டனர்.


Click it and Unblock the Notifications











