என்னாச்சு? விலகினார் மோகன் ராஜா.. அந்தாதுன் ரீமேக்கை இயக்கும் 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர்!

By

சென்னை: அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதில் இருந்து, இயக்குனர் மோகன் ராஜா திடீரென விலகி உள்ளார்.

இந்தியில், அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், அந்தாதுன்.

பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படமான இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார்.

தேசிய விருதுகள்

தேசிய விருதுகள்

சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிப்பதாக அவர் அறிவித்திருந்தார். இந்தப் படத்துக்காக, உடல் எடையை அவர் 22 கிலோ குறைத்திருந்தார்.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

அந்தாதுன் கதை, பியானோ மாஸ்டரை பற்றியது. நடிகர் பிரஷாந்த், பியானோ பயின்றிருக்கிறார் என்பதால் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்துவார் என்று தியாகராஜன் கூறியிருந்தார். படத்தை மோகன் ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பல தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, இதையும் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது.

விலகிய மோகன் ராஜா

விலகிய மோகன் ராஜா

இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து அவர் விலகி உள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இப்போது, கீர்த்தி சுரேஷ் நடித்து அமேசானில் ரிலீஸ் ஆன, பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜெ.ஜெ.பிரட்ரிக் இதை இயக்க இருக்கிறார். இதை படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்திக், யோகிபாபு

கார்த்திக், யோகிபாபு

இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கும் யோகிபாபுவும் இணைந்துள்ளனர். கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயின் முடிவாகவில்லை. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிதின் ஹீரோவாக நடிக்கிறார். தபு நடித்த நெகட்டிவ் கேரக்டரில் தமன்னாவும் ஹீரோயினாக நபா நடேஷும் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X