தமிழ் ராக்கர்ஸ் மட்டுமில்ல.. டெலிகிராமும் பெரிய தலைவலி தான்.. வைரலாகும் பொன்மகள் வந்தாள் மீம்ஸ்!

சென்னை: தியேட்டரில் ஒரு படம் ரிலீசானால், அன்றைய தினமே தியேட்டர் பிரின்ட்டுடன் புதுப்படம் திருட்டுத்தனமாக பைரஸி தளங்களில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு தலைவலியாக மாறும்.

Recommended Video

Jothika Exclusive Interview | Ponmagal Vandhal • JJ Fedrick

தற்போது, வாட்ஸப் போன்றே வைரலாகி வரும் டெலிகிராம் செயலியில், எவ்வளவு பெரிய டேட்டாவையும் அசால்ட்டாக அனுப்ப முடியும் என்கிற சூழலில், தமிழ் ராக்கர்ஸ் போலவே தயாரிப்பாளர்களுக்கு டெலிகிராமும் பெரிய தலைவலி ஆகி விட்டது.

OTT தளத்தில் புதிய படம் ரிலீஸ் என்ற அந்த பூனைக்கு மணியை கட்டியுள்ள சூர்யாவும் ஜோதிகாவும் தற்போது புதிய பிரச்சனையை சந்திக்க உள்ளனர்.

சுடச்சுட

சுடச்சுட

அமேசான் பிரைமில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் அப்படியே ஹெச்.டி. தரத்தில் சுடச்சுட தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி தளங்களிலும், டெலிகிராமில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டு பல லட்ச மக்களின் பார்வைக்கு விருந்தாகி வருகிறது. இது அமேசானை பாதிக்குமா பாதிக்காதா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

டெலிகிராம் மீம்ஸ்

டெலிகிராம் மீம்ஸ்

கவுண்டமணி, செந்தில், வடிவேலு நடிப்பில் செம ஃபேமஸான இளநீர் வியாபார காமெடி டெம்ப்ளேட்டை வைத்து, சூர்யாவிடம் இருந்து அமேசான் பிரைம் வாங்கிய பொன்மகள் வந்தாள் படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆட்டையை போடுவதும், அதிலிருந்து டெலிகிராம் ஓட்டையை போடுவதும் என மீம்கள் பறக்கின்றன.

தைரியமாக

தைரியமாக

பொன்மகள் வந்தாள் படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்க்கும் ஸ்க்ரீன் ஷாட்களை வெளிப்படையாக ரசிகர்கள் டிவீட் போட்டு வருவது என்ன டிசைன் என்றே தெரியவில்லை. அமேசான் பிரைமுக்கு எதுக்கு தனியா சப்ஸ்கிரைப் பண்ணனும், ஆன்லைனிலேயே ரிலீஸ் ஆகுற படத்தையே ஆன்லைனிலேயே டவுன்லோடு செய்து பார்க்குறோம் என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

போர் அடிக்குது

போர் அடிக்குது

படத்தை வீட்டிலேயே இருந்தபடி பார்த்துவிட்டு, பலரும் பலவிதமான விமர்சனங்களை குவித்து வருகின்றனர். படம் கெஸ் பண்ணுவது போலவே இருப்பதாகவும், எந்தவொரு ட்விஸ்ட்டும் சுவாரஸ்யமும் இல்லை, சோஷியல் மெசேஜ் மட்டும் வச்சுக்கிட்டு ஜோதிகாவ எவ்வளவு நேரம் சார் பார்க்குறது, போர் அடிக்குதுன்னு என கலாய்த்தும் வருகின்றனர்.

தானம் பண்ணுங்க

தானம் பண்ணுங்க

ஜோதிகா, பார்த்திபன், பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் மற்றும் தியாகராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை தமிழ் ராக்கர்ஸில் பாருங்க, பார்த்துட்டு, அந்த படத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுங்க என்றும் பலரும் அமேசான் பிரைமை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X