பிக் பாஸ் பீவரில் இருந்து விடுபடாத பொன்னம்பலம்... பாக்குறவங்களுக்கு எல்லாம் பேர் வைக்கிறாரு!
நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் மூடில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றே தோன்றுகிறது.
Recommended Video

சென்னை: நடிகர் பொன்னம்பலம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டாலும், அந்த மூடில் இருந்து அவர் இன்னும் வெளி வரவில்லை என்றே தோன்றுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் 15 போட்டியாளர்களில் ஒருவராக நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான பொன்னம்பலம் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் சுமார் ஐந்து வாரங்கள் தாக்குப்பிடித்து வெளியேறினார் அவர். அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, சக போட்டியாளரான டேனியல் எல்லோருக்கும் பட்டப்பெயர் வைத்து கூப்பிட்டார். போட்டியாளர்கள் எல்லோருமே பொன்னம்பலத்தை சித்தப்பா என்றே அழைத்தனர்.

கலாச்சாரம்
கலாச்சாரத்தை பற்றியும், பண்பாட்டை பற்றியும் பேசி சர்ச்சையையும் ஏற்படுத்தினார் பொன்னம்பலம். மகத், யாஷிகா, ஐஸ்வர்யா பற்றி அவர் கூறிய சில கருத்துகள் விவாதத்துக்கு உள்ளானது.

முதல் முறையாக
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக, காட்டேரி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பொன்னம்பலம் கலந்துகொண்டார். இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக்குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டாராம் பொன்னம்பலம்.

அடிக்கடி பிக் பாஸ்
செய்தியாளர்களிடம் பொன்னம்பலம் பேசும் போதும், அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியே குறிப்பிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி போல், காட்டேரி படத்தின் இயக்குனர் டீகேவுக்கு பட்டப் பெயர் ஒன்றையும் அவர் வைத்தார்.

டிராகுலா கிங்
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குனர் டீகே கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குனர் டீகேவுக்கு 'டிராகுலா கிங்' என்கிற பட்டத்தை வழங்குகிறேன்" என கூறினார்.

செய்தியாளர்கள் கமெண்ட்
அவர் இவ்வாறு பேசியதும், பொன்னம்பலம் சித்தப்பா பிக் பாஸ் மூடில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என செய்தியாளர்கள் கமெண்ட் அடித்தனர்.


Click it and Unblock the Notifications











