சிரஞ்சீவி இல்லைன்னா நான் இல்லை...நெகிழ்ச்சியாக நன்றி சொன்ன பொன்னம்பலம்

சென்னை : பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பொன்னம்பலம். இவர் தமிழில் மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பாலான மொழி படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரின் மனங்களை வென்றார்.

Ponnambalams emotional thanks message to Megastar Chiranjeevi for saving his life

கடந்த சில ஆண்டுகளாகவே பொன்னம்பலம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்களும் பொன்னம்பலத்திற்கு மருத்துவ நிதி உதவி வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் பொன்னம்பலம் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்த மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு மனமாற நன்றி தெரிவித்துள்ளார்.

அவரை தான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் எனவும், அனுமனின் பெயரை கொண்டுள்ள அவர், பெயருக்கு ஏற்றபடி சிரஞ்சீவியாக வாழ வேண்டும் எனவும் பொன்னம்பலம் வாழ்த்தி உள்ளார். சிரஞ்சீவி இல்லைன்னா தான் இன்று உயிருடனேயே இருந்திருக்க முடியாது என நெகிழ்ச்சியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X