சொந்த சகோதரரே விஷம் கொடுத்த கொடூரம்.. வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் கண்ணீர் கதை!

சென்னை : சொந்த சகோதரரே விஷம் கொடுத்து தன்னை கொல்ல முயற்சி செய்ததாக வில்லன் நடிகர் பொன்னம்பலம் பகீர் தகவலை கூறியுள்ளார்.

வில்லன் நடிகரான பொன்னம்பலம் ரஜினி,கமல், விஜய்காந்த், சரத்குமார், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களில் படங்களில் வில்லான நடித்துள்ளார்.

வில்லன் நடிகராக மட்டும் இல்லாமல் கோமாளி, காட்டேரி போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார்.

வில்லன் நடிகர் பொன்னம்பலம்

வில்லன் நடிகர் பொன்னம்பலம்

பட வாய்ப்பு இல்லாததால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட, பொன்னம்பலம், 56 நாட்களில் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தேடிவரும் நிலையில், பொன்னம்பலத்திற்கு எந்த வாய்ப்பும் வரவில்லை.

சிறுநீரக பாதிப்பு

சிறுநீரக பாதிப்பு

இதையடுத்து, இரண்டு ஆண்டுகளாக சிறுநீரகம் செயல் இழந்து உயிருக்கு போராடி உள்ளார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு போதி பண வசதி இல்லாததால், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்,நடிகர், நடிகைகளிடம் உதவியை நாடினார். இதில்,சரத்குமார், விஜய்காந்த், கமல் போன்றோர் இவருக்கு பண உதவி செய்துள்ளனர்.

குடிப்பழக்கம் தான் காரணம்

குடிப்பழக்கம் தான் காரணம்

அண்மையில் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில், பொன்னம்பலத்தின் சொந்த அக்கா மகன் ஜெகநாதன் சிறுநீரகத்தை தானமாக கொடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி உள்ளார். தற்போது இவர் உடல் நலம் தேறி உள்ளார். பொன்னம்பலத்தின் இந்த மோசமான நிலைமைக்கு காரணம், அவரின் மோசமான குடிப்பழக்கம் தான் காரணம் என பலரும் குற்றம்சாட்டினார்கள்.

அண்ணன் தான் காரணம்

அண்ணன் தான் காரணம்

இந்நிலையில், பொன்னம்பலம் அளித்த பேட்டியில், குடிப்பழக்கம் தான் என் சிறுநீரகம் செயல் இழந்ததற்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால், எனது இந்த நிலைக்கு காரணம் என் அண்ணன் தான் என்றார். என் தந்தைக்கு நான்கு மனைவிகள். அதில் மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் பணிபுரிந்தார். நான் அவரை மிகவும் நம்பினேன்.

ஸ்லோ பாய்சன் கொடுத்தார்

ஸ்லோ பாய்சன் கொடுத்தார்

ஆனால், அவர், எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்து என்னை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். நான் இப்போது, நல்ல நிலையில் இருக்கிறேன். ஒரு நாள் வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் பார்த்தபோதுதான் என்னை கொல்ல ஏதோ சூனியம் செய்து கொண்டிருந்தார்கள்.

மன்னித்துவிட்டேன்

மன்னித்துவிட்டேன்

கையும் களவுமாக அவர்களை பிடித்து விசாரித்த போது தான் இந்த விஷயத்தை அவர்கள் சொன்னார்கள். உண்மை தெரிந்து பிறகுவும் அதிர்ச்சி அடைந்தேன். இருந்தாலும், என் சகோதரர் மீது போலீசில் புகார் கொடுக்க நான் விரும்பவில்லை. புகார் கொடுத்து என்ன சாதிக்க போகிறேன் என நினைத்து விட்டுவிட்டேன் என்றார். என் அண்ணன் என் மீது இருந்த பொறாமையால் இப்படி செய்து விட்டார் என பொன்னம்பலம் அதிர்ச்சியான தகவல் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X