twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனா? பாகுபலியா?..கோலிவுட்-டோலிவுட் ரசிகர்கள் மோதல்..கவலையில் திரையுலகினர்

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படம் வெளியானதிலிருந்து புதுப்புது சர்ச்சைகள் எழுந்துள்ளன. மோதல்களும் அதிகரித்து வருகிறது.

    தமிழ் திரையுலகிற்குள்ளேயே பொன்னியின் செல்வன் மீதான விமர்சனம், சமூக வலைதளங்களில் நடக்கும் வாதங்கள் அதிகரித்து வருகிறது.

    மறுபுறம் தமிழ்-தெலுங்கு ரசிகர்கள் இருவேறாக பிரிந்து மோதுவது திரையுலகினரை கவலையுற செய்துள்ளது. இது வியாபாரத்தையே பாதிக்கும் என கலங்குகின்றனர்.

    பொன்னியின் செல்வனுடன் மல்லுக்கட்டும் தனுஷின் நானே வருவேன்... 6வது நாளிலும் வசூலில் குறையில்லை…பொன்னியின் செல்வனுடன் மல்லுக்கட்டும் தனுஷின் நானே வருவேன்... 6வது நாளிலும் வசூலில் குறையில்லை…

     காவிரி பிரச்சினையில் சிக்கிய திரையுலகம்

    காவிரி பிரச்சினையில் சிக்கிய திரையுலகம்

    தமிழகம், கர்நாடகா காவிரி பிரச்சினை எழுந்தபோது முதலில் பாதிக்கப்பட்டது திரையுலகம் தான். தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிடுவதும், தமிழக கலைஞர்களை புறக்கணிப்பதும் நடந்தது. இதனால் அலறிய திரையுலகினர் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி சுமூகமாக்கினர். நடிகர் சத்யராஜ் அவரது படத்துக்காக வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதே நிலை தற்போது கோலிவுட் டோலிவுட்டில் உருவாகியுள்ளது.

     பொன்னியின் செல்வன் தொடங்கியதிலிருந்தே சர்ச்சை

    பொன்னியின் செல்வன் தொடங்கியதிலிருந்தே சர்ச்சை

    தமிழ் படமான பொன்னியின் செல்வன் பல இக்கட்டான நிலைகளை கடந்து பெரும் பட்ஜெட்டில் இரண்டு பாகமாக தயாரிக்கப்பட்டு முதல்பாகம் வெளியாகியுள்ளது. படம் சோழ மன்னன் கதையை கொண்டது. இதனால் ஆரம்பத்திலிருந்தே சமூக வலைதளங்களில் வாத விவாதங்கள் அனல்பறந்தது. அது திரையுலகினர் மத்தியிலும் எதிரொலிக்க வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு எதிர்ப்பு கருத்துகள் சினிமா உலகை சூடேற்றிக்கொண்டிருக்கிறது. இவைகள் பட ப்ரமோஷனுக்காக என்று சிலர் ஆங்காங்கே பதிவு செய்கின்றனர். ஆனால் மற்றொரு விஷயம் தமிழ், தெலுங்கு திரையுலகினரை கவலையுற வைத்துள்ளது.

     தமிழ்-தெலுங்கு திரையுலகினரை கவலைப்படச் செய்யும் விஷயம்

    தமிழ்-தெலுங்கு திரையுலகினரை கவலைப்படச் செய்யும் விஷயம்

    அது ராஜமவுலி ஆரம்பித்து வைத்த நெருப்பு. ராம் கோபால் வர்மா வைத்த தீ. பின்னர் பற்றி எரிந்து பாகுபலியா-பொன்னியின் செல்வனா என வாதமாக மாறி சமூக வலைதளங்களில் கோலிவுட், டோலிவுட் ரசிகர்களின் மொழிமோதாலாக மாறியுள்ளது. தமிழ் படமா? தெலுங்கு படமா எது பெரிது என்கிற வாதம் வைக்கப்படுகிறது. இது ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, கேஜிஎஃப் -2 படங்கள் வெளியானபோது சற்று எழும்பியது. தமிழில் நல்ல இயக்குநர்கள் படமெடுப்பவர்கள் இல்லை என்ற கருத்து வைக்கப்பட்டு விக்ரம் வந்து அதற்கு மூடுவிழா நடத்தியது. இதனால் சர்ச்சை சில நாட்கள் அடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் கிளம்பியுள்ளது.

    பொன்னியின் செல்வனா? பாகுபலியா? பற்றியெரியும் தீ

    பொன்னியின் செல்வனா? பாகுபலியா? பற்றியெரியும் தீ

    பொன்னியின் செல்வனா பாகுபலியா? கோலிவுட்டா?, டோலிவுட்டா என்று கிளம்பும் வாதம் நடிகர்களை ட்ரோல் செய்வது, மொழியைப்பற்றி மோதிக்கொள்வதாக உருவெடுத்துள்ளது. போதாதகுறைக்கு பாகுபலி ஹீரோ பிரபாசின் ஆதிபுருஷ் படம் அதன் மேக்கிங்கில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். கோலிவுட்- டோலிவுட் உறவு 80 ஆண்டு சகோதர பந்தம். கடந்த 10 ஆண்டுகள் வரை தமிழ்-தெலுங்கு பட உலகம் சென்னையில்தான் இயங்கியது. பின்னர் ஐதராபாத்துக்கு மாறியது. தமிழ் நடிகர்கள் தெலுங்கில் நடிப்பதும், தெலுங்கு நடிகர்கள் தமிழில் நடிப்பதும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று.

     தமிழ்-தெலுங்கு திரையுலகின் பிரிக்க முடியா சகோதர பந்தம்

    தமிழ்-தெலுங்கு திரையுலகின் பிரிக்க முடியா சகோதர பந்தம்

    இருவருக்கும் அது தாய்வீடு போல. இங்குள்ள சூர்யா, கார்த்திக்குக்கு அங்கு ரசிகர்கள் அதிகம். விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் அங்குள்ள நடிகர்களை தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகன், ஆனால் இந்த வேறுபாடு பார்க்கப்படவில்லை. புஷ்பா, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் வெற்றி அதற்கு உதாரணம். ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வரும் சகிப்புத்தன்மையற்ற மோதல்கள் மொழி, இனம் சார்ந்து நகர்கிறது. இதனால் திரையுலகினர் கடுமையாக பாதிக்கப்படுவர். தமிழ் நடிகர்களை புறக்கணிப்போம் என தெலுங்கு ரசிகர்களும், தெலுங்கு நடிகர்களை புறக்கணிப்போம் என தமிழ் ரசிகர்களும் முடிவெடுத்தால் பான் இந்தியா படங்களுக்கு பால் ஊற்ற வேண்டியதுதான்.

     திரையுலகினர் வைக்கும் நெருப்பு..பெருகும் சமூக வலைதள பதற்றம்

    திரையுலகினர் வைக்கும் நெருப்பு..பெருகும் சமூக வலைதள பதற்றம்

    இதனால் இதுபோன்ற மோதல்களுக்கு முதலில் திரையுலகினர் பக்கமிருந்து ஆரம்பிக்கப்படும் விமர்சனங்களுக்கு முடிவு கட்டவேண்டும். இவர்கள் கிளப்பும் சிறு பொறியும் பற்றிக்கொண்டு காட்டுத்தீபோல் இண்டஸ்ட்ரியை அழித்துவிடும். முன்பெல்லாம் திரைத்துறையில் உள்ளவர்களின் சின்னத்தனமான மோதல் வெளியில் வராது, ஆனால் சமூக வலைதள காலம், வளைச்சு வளைச்சு யூடியூப் சானல்களுக்கு பேட்டி அளிப்பது சிக்கலை கொண்டுவந்து சேர்க்கிறது என இண்டஸ்ட்ரியில் உள்ள அக்கறைக்கொண்டோர் ஆதங்கமாக உள்ளது. முதலில் இதை சரி செய்தாலே திரையுலகம் தப்பிக்கும்.

    English summary
    Since the release of Ponniyin Selvan, fresh controversies have arisen. Conflicts are also increasing.Criticism of Ponniyin Selvan within the Tamil film industry and arguments on social media are on the rise. On the other hand, Tamil-Telugu fans are divided and clashed, which has worried the film industry. They are worried that this will affect the business itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X