twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘திரைக்கதையின் மன்னன்’ இயக்குநர் மகேந்திரன்..எம்ஜிஆர் கொடுத்த பொன்னியின் செல்வன் அசைன்மெண்ட்

    |

    சென்னை: எத்தனையோ இயக்குநர்கள் தமிழ் சினிமாவை ஆண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தவர் இயக்குநர் மகேந்திரன். தங்கப்பதக்கம் எனும் அற்புதமான படத்தின் கதாசிரியர் மகேந்திரன்.

    ரஜினியை பாலச்சந்தர் கண்டுபிடித்தார், ஆனால் அவரை வளர்த்ததில் மகேந்திரனுக்கு பெரும் பங்குண்டு.

    எம்ஜிஆர் இவரது திறமையை வியந்து பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதும் பொறுப்பை எம்ஜிஆர் ஒப்படைத்தார்.

    ஓடிடியில் வெளியாகும் ஆண்ட்ரியாவின் 'வட்டம்'..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!ஓடிடியில் வெளியாகும் ஆண்ட்ரியாவின் 'வட்டம்'..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

    எனக்குப் பிடித்த இயக்குநர் குருநாதரிடம் சொன்ன ரஜினி

    எனக்குப் பிடித்த இயக்குநர் குருநாதரிடம் சொன்ன ரஜினி

    ரஜினிகாந்தை ஒரு விழா மேடையில் பாலச்சந்தர் பேட்டியெடுத்தார். உனக்கு பிடிச்ச பதிலைச் சொல்லு, பிடிக்காத கேள்விக்கு பதில் சொல்லாதே என பாலச்சந்தர் பீடிகையுடன் கேள்விகளை முன் வைத்தார். உனக்கு பிடித்த இயக்குநர் யார் என பாலச்சந்தர் கேட்க அரங்கில் உள்ள அனைவரும் குருநாதர் பாலச்சந்தர், தன்னை அறிமுகப்படுத்திய பாலச்சந்தரின் பெயரைச் சொல்வார் என எதிர்ப்பார்த்த நிலையில் பட்டென்று மகேந்திரன் என சொன்னார் ரஜினிகாந்த். சினிமாவை நன்கு அறிந்த அதே நேரம் கேள்வி கேட்பவர் தன்னை ஆளாக்கிய பாலச்சந்தர் என தெரிந்தும் மகேந்திரன் பெயரை ரஜினி சொல்ல காரணம், மகேந்திரனின் ஆளுமைதான்.

    ரஜினிக்கு ரஜினி ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர்

    ரஜினிக்கு ரஜினி ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர்

    ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் ஒருவிதமாக ஸ்டைலை பின்பற்றினார், பின்னர் அவரது ஸ்டைல் வேறு மாதிரி இருந்தது, ஆனாலும் அது ரஜினி ஸ்டைல் தான். பின்நாளில் அமிதாப் பச்சனின் ஸ்டைலை காமெடியாக நடிப்பதை எடுத்துக்கொண்டார். ஆனால் மகேந்திரனின் தாக்கம் ரஜினிக்கு அதிகம் இருந்தது எனலாம். மகேந்திரன் இறப்பதற்கு முன் சில படங்களில் நடித்தார் அதில் அவர் ரஜினி ஸ்டைலில் நடிப்பதாக சிலர் சொன்னார்கள், ஆனால் அதுதான் மகேந்திரனின் ஒரிஜினல் ஸ்டைல் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.

    பொன்னியின் செல்வன் அசைன்மெண்டை ஒப்படைத்த எம்ஜிஆர்

    பொன்னியின் செல்வன் அசைன்மெண்டை ஒப்படைத்த எம்ஜிஆர்

    மகேந்திரன் கல்லூரி மாணவராக ஒருவிழாவில் பேச அங்கு தலைமை தாங்க வந்த எம்ஜிஆருக்கு அவரது பேச்சு பிடித்துப்போக தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டு போனார். கல்லூரிப்படிப்பை முடித்து வழக்கறிஞாக ஆகும் எண்ணத்தில் பி.எல். படிப்பிப் சேர படிப்பை தொடர முடியாத நிலையில் பத்திரிக்கையாளராக பணியை தொடர்ந்தார். சோ ராமசாமியின் துக்ளக் வார இதழில் பணிபுரிந்துள்ளார். பின்னர் எம்ஜிஆரை சந்திக்க, எத்தனையோ பேர் இருக்க இளைஞரான மகேந்திரனிடம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் கதை உரிமையை வாங்கி அதை திரைக்கதையாக எழுதும் பணியை எம்ஜிஆர் ஒப்படைத்தார். அதற்காக அவ்வப்போது சம்பளம் வழங்கி வந்தார் எம்ஜிஆர்.

    திரைக்கதை மன்னன் மகேந்திரன்

    திரைக்கதை மன்னன் மகேந்திரன்

    பின்னர் எம்ஜிஆர் நாடக கம்பெனிக்காக கதை ஒன்றை எழுதிக்கொடுத்தார் மகேந்திரன். எம்ஜிஆர் நடித்த காஞ்சித்தலைவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். திரைக்கதை எழுதுவதில் மகேந்திரன் புகழ்ப்பெற்றவர். காவல்துறையை பெருமைப்படுத்தும் வண்ணம் சிவாஜி கணேசனுக்காக இவர் எழுதிய தங்கப்பதக்கம் பெரும் பெயரை பெற்றுத்தந்தது. தந்தை மகன் ஈகோ, தாய் இடையில் சிக்கி தவிக்கும் பாசப்போராட்டம் என படத்தில் வசனம் துள்ளி விளையாடும். அந்த காலத்தில் ரெக்கார்டு பிளேயரில் வசனம் தெருத்தெருவாய் ஒலிக்கும்.

    ரஜினிக்கு முள்ளும் மலரும்

    ரஜினிக்கு முள்ளும் மலரும்

    ரஜினியை வைத்து முள்ளும் மலரும் படத்தை இயக்கினார் மகேந்திரன். அவருக்கு இயக்குநராக அது முதல்படம். ரஜினி படத்தில் பேசும் வசனங்களும், உடல் மொழியும் தனி ரசிகர் கூட்டத்தை அவருக்கு அளித்தது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நவீன பாசமலராக பேசப்பட்டது. "ரெண்டு கையும் காலும் போனாலும் பொழைச்சுக்குவான் கெட்டப்பய சார் இந்த காளி" என ரஜினி பேசும் அசால்ட் வசனம் அவர் பின்நாளில் யதார்த்த நாயகனாக உருவெடுத்தபோது பெரிதும் உதவியது.

    ரஜினிக்கு 3 படம்

    ரஜினிக்கு 3 படம்

    மகேந்திரன் இயக்குநராக ரஜினியை வைத்து 3 படங்களை இயக்கியுள்ளார். பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர் உள்ளிட்ட பல இயக்குநர்கள் இயக்கியிருந்தாலும் ரஜினிக்கு மகேந்திரனே தனக்கு பிடித்த இயக்குநராக தெரிந்துள்ளார். அந்த அளவுக்கு திரைக்கதை, காட்சி அமைப்புகளை படமாக்குவதில் மகேந்திரன் வல்லவர். அவர் எழுதிய ரிஷிமூலம் நாடகமாக வந்து பின்னர் சிவாஜி கே.ஆர்.விஜயா நடிப்பில் சிறப்பாக ஓடியது.

    ‘நெஞ்சத்தை கிள்ளாதே'-க்கு கிடைத்த தேசிய விருது

    ‘நெஞ்சத்தை கிள்ளாதே'-க்கு கிடைத்த தேசிய விருது

    மகேந்திரன் பலரை அறிமுகப்படுத்தியுள்ளார் அதில் முக்கியமானவர் சுஹாசினி. கேமராவுமனாக இருந்தவரை தனது நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றது. அஷோக்குமாரின் கேமரா, எஸ்பிபியின் குரலில் இளையராஜா இசையில் பருவமே புதிய பாடல் பாடு இளைஞர்களின் ஈர்ப்புவிசை பாடலாக 80 களில் அமைந்தது. இன்று மகேந்திரனின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம். ஆழமான திரைக்கதைகள் குறைந்து வன்முறைகளை நம்பும் இயக்குநர்கள் மத்தியில் மகேந்திரன் போன்று அழுத்தமான வரவுகளின் தேவை அதிகமே.

    English summary
    Many directors have ruled Tamil cinema. Director Mahendran holds a prominent place in it. Mahendran is the scriptwriter of the wonderful Movie Thangapadhakam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X