பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆஃபிஸ்: வெறித்தனமான வசூல் வேட்டையில் மணிரத்னத்தின் சோழர் படை!
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் நேற்று (செப் 30) திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்காத மிகப் பெரிய ஓப்பனிங் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன்
எம்ஜிஆர் முதல் கலம்ஹாசன் வரை பல ஜாம்பவான்களின் கனவுப் படமாக இருந்த பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு முறை மணிரத்னத்தின் முயற்சி தோல்வியடைந்தாலும் விடாமல் மூன்றாவது முறையாக படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம். இந்தி திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் சொன்னபடி நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

சூப்பர் ஓப்பனிங் கிடைத்துள்ளது
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதால், சினிமா ரசிகர்கள், இலக்கிய வாசகர்கள் என அனைவரும் இந்தப் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று வெளியான பொன்னியின் செல்வனுக்கு உலகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ரசிகர்களும் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் ஆன்லைன் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் தீயாய் விற்றுத் தீர்ந்தன.

எத்தனை கோடி வசூல் தெரியுமா?
முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக புக்கிங் ஆகிவிட்ட நிலையில், முதல் நாளில் மட்டும் பொன்னியின் செல்வன் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதால் தான், படத்தின் வசூலும் தாறுமாறாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், முதல் நாளில் படம் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்கள் கொடுத்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் மேக்கிங் செம்மையாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

விரைவில் 100 கோடி கன்ஃபார்ம்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் கலெக்ஷன் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் இதுவரை உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை எந்த தமிழ் சினிமாவுக்கும் கிடைக்காத செம்மையான ஓப்பனிங் இது என சொல்லப்படுகிறது. மார்ச் மாதம் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் மொத்தமாக 600 கோடி வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை பொன்னியின் செல்வன் விரைவில் தட்டித் தூக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











