twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    12 மணி நேரத்தில்..10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன..பொன்னியின் செல்வன் முன்பதிவில் சாதனை!

    |

    சென்னை : மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் 1 டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

    எழுத்தாளர் கல்கி எழுதியை பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார்.

    இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

    பாவனாவுக்கு என்னதான் ஆச்சு... லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்!பாவனாவுக்கு என்னதான் ஆச்சு... லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்!

    PS1

    PS1

    பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தொடங்கிய நிலையில், படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, விசாகப்பட்டிணம், மத்திய பிரதேசத்தின் கோட்டை நகரான குவாலியர் என பல இடங்களில் நடைபெற்றது. தற்போது படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது.

    வெள்ளிக்கிழமை ரிலீஸ்

    வெள்ளிக்கிழமை ரிலீஸ்

    ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ரவி வர்மன் இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள, தோட்டா தரணி கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். ஜெயமோகன் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல், டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

    விற்றுத்தீர்ந்த டிக்கெட்

    விற்றுத்தீர்ந்த டிக்கெட்

    பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் விற்பனை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், இதுவரை, 225 திரையரங்குகளில் மட்டும் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் ரூ.4.50 கோடி வசூலாகியுள்ளதாகவும், மற்ற தியேட்டர்களில் இன்றும் நாளையும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என கூறப்படுகிறது.

    12 மணி நேரத்தில் 10ஆயிரம் டிக்கெட்

    12 மணி நேரத்தில் 10ஆயிரம் டிக்கெட்

    இந்நிலையில், சேலத்தில் உள்ள ஆஸ்கார் மல்டிபிளக்ஸ் தியேட்டர் நேற்று டிக்கெட் விற்பனையை தொடங்கியது.விற்பனை தொடங்கிய 12 மணி நேரத்திற்குள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. மேலும் அக்டோபர் 5ந் தேதி வரை சிறப்புக்காட்சியாக காலை 7 மணிக்கு பொன்னியின் செல்வன் படம் திரையிடப்பட உள்ளது.

    English summary
    Mani Ratnam directed 'Ponniyin Selvan' film is releasing on September 30. 10 thousand tickets sold in advance within 12 hours
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X