PS 2 Audio Launch: பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழா.. பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்
இன்று நடைபெறவிருக்கும் சூழலில் தன்னிடம் பணியாற்றிய இசைக்கலைஞர்களை ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாகியுள்ளது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரமே பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.

வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் 1
ஐந்து பாகங்களை கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இரண்டு பாகங்களாக இயக்கியிருக்கிறார் மணிரத்னம் இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று உலகளவில் 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அறிவித்தது.

பொன்னியின் செல்வன் 2 ஏப்ரலில் ரிலீஸ்
பொன்னியின் செல்வன் முதல் பாகம் பெற்ற வரவேற்பை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமானது ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. முதல் பாகம் போலவே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இரண்டாம் பாகம் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது.

ரஹ்மானின் ப்யூர் மெலோடி அக நக பாடல்
படத்தில் இடம்பெற்ற அக நக பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை முணுமுணுக்க வைத்துள்ளது. பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாட, இளங்கோ கிருஷ்ணா எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ரீ ரெக்கார்ட்டிங் லண்டனில் அப்பே ரோட் ஸ்டூடியோவில் சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அப்போது ரஹ்மானும், மணிரத்னமும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

தனது சவுண்ட் இன்ஜினியர்களை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று நடைபெறவிருக்கும் PS2 ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மொத்தம் 35 மாஸ்டர்களை (ஒரிஜினல் காப்பி) வழங்கிய எனது மிக்ஸிங் இன்ஜினியர்களுக்கு வாழ்த்துகள். உறக்கமற்ற இரவுகள், அர்ப்பணிப்பு" என பதிவிட்டு புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், உங்களது இசையை கேட்க மிகுந்த ஆவலோடு இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாக இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்குகிறது. இதில் கமல் ஹாசன், சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். கமல் ஹாசன் பொன்னியின் செல்வன் ட்ரெய்லரையும், இசையையும் வெளியிடவிருக்கிறார். ட்ரெய்லரானது இரவு 9.30 மணிக்கு வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











