ஓரே மாதத்தில் ஓடிடிக்கு வந்த பொன்னியின் செல்வன் 2.. வெற்றி படத்துக்கே இந்த நிலைமையா?
சென்னை : பொன்னியின் செல்லவன் இரண்டாம் பாகம் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படம் பான் இந்திய திரைப்படமான 5மொழிகளில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது
பொன்னியின் செல்வன் 2 : பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோரின் கனவாக இருந்தது. இந்த படத்தை மணிரத்னம் ஏற்கனவே இரண்டு முறை எடுக்க நினைத்து முடியாமல் போனது. இதையடுத்து பல முயற்சிகளுக்கு பின். ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி உள்ளது,

வசூல் சாதனை : பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் சாதனை படைத்தது. பொன்னியின் செல்வன் நாவலை படித்து பூரிந்துப் போன ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமுடன் திரையில் பார்த்து ரசித்தனர்.
முன்னணி நடிகர்கள் : கடந்த ஏப்ரல் 28ந் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ரூ 100 கோடி வசூல்: இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதனை அதிக பொருட்செலவில் 'மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர். முதல் பாகம் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் இரண்டாம் பாகம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலானதாக சொல்லப்படுகிறது.
ஓடிடியில் : இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் மே 26 ஆம் தேதி பணம் கட்டி பார்க்கும் முறை இருந்த நிலையில், இன்று முதல் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் இலவசமாக பார்க்கலாம். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பின்னரே ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் ஒரே மாதத்தில் ஓடிடி க்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











