PS 2 Review: அது ஐஸ்வர்யா ராய் இல்ல ஆயா... பொன்னியின் செல்வன் 2-வை கிழித்து தொங்கவிட்ட ப்ளு சட்டை

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் எப்படி உள்ளது என ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

அதில், மணிரத்னம் ஒரு காலி பெருங்காய டப்பா என விமர்சித்துள்ள ப்ளு சட்டை மாறன், மொத்த படத்தையும் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

 Ponniyin Selvan 2 Blue Sattai Maran Review in Tamil

பொன்னியின் செல்வன் 2 ப்ளு சட்டை மாறன் விமர்சனம்:மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பை விடவும் இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. அதேபோல், ரசிகர்களிடமும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்நிலையில், தற்போது ப்ளு சட்டை மாறன் பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே தனது ஸ்டைலில் விமர்சனத்தை தொடங்கியுள்ளார் ப்ளு சட்டை மாறன். அதாவது பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற ட்வீஸ்ட் இருந்தது. பொன்னியின் செல்வன் படத்திலும் அப்படி இருக்க வேண்டும் என ஜெயம் ரவியையும் கார்த்தியையும் கடலில் மூழ்கடித்தார் மணிரத்னம்.

அப்போது ஊமை ராணி என்ற கேரக்டரை அறிமுகப்படுத்திய மணிரத்னம், இது பெரிய ட்விஸ்ட்டாக இருக்கும் என நினைத்தார். ஆனால், இது நல்லா ஊமைக் குத்தாக அமைந்துவிட இரண்டாம் பாகத்தை பார்க்க ரசிகர்களுக்கு ஆர்வமே இல்லை என்றுள்ளார். இதனால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் காற்று வாங்குவதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் பொன்னியின் செல்வன் படத்தை தொடங்கிவிட்டு எப்படி முடிக்க வேண்டும் என தெரியாமல் மணிரத்னம் திணறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் சூழ்ச்சி, வரலாற்றுப் பின்னணி என உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் எந்த கேரக்டர்களும் மனதில் ஒட்டவே இல்லை என விமர்சித்துள்ளார் ப்ளு சட்டை மாறன். மேலும், பொன்னியின் செல்வன் நாவல் ஒவ்வொரு வாரமும் பத்திரிகையில் வெளியாகும் போது அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அது சுத்தமாக இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மணிரத்னம் ஒரு காலி பெருங்காய டப்பா என்பதை நிரூபித்துவிட்டார். இந்தப் படம் முழுவதும் எந்த சரக்கும் இல்லையென்றும், வெறும் பொன்னியின் செல்வன் என்ற வாசனையை வைத்தே படத்தை ஓட்டியுள்ளார் எனவும் விமர்சித்துள்ளார். படம் முழுக்க ஒரு இடத்தில் கூட ரசிகர்கள் கை தட்டவும் விசில் அடிக்கவும் வாய்ப்பே இல்லை.

பொன்னியின் செல்வன் படத்துக்கு முட்டுக் கொடுத்த முட்டு பாய்ஸ் கூட இரண்டாம் பாகத்தை பார்க்க முடியாமல் திணறிவிட்டனர். ஆனால், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும் என முட்டுக் கொடுப்பார்கள், அதனை நம்பிட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மேலும், முட்டு பாய்ஸ் எல்லாம் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என, மல்டி பிளக்ஸ் தியேட்டரில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கலாய்த்துள்ளார்.

 Ponniyin Selvan 2 Blue Sattai Maran Review in Tamil

அதேபோல், ஜெயம் ரவியின் கேரக்டர், அவரது பாத்திரமான அருள்மொழிவர்மன் என்கிற பொன்னியின் செல்வன் என்பதை ஏன் படத்தின் டைட்டிலாக வைத்துள்ளார்கள் என்றும் விமர்சித்துள்ளார். முக்கியமாக கார்த்தி - ஜெயராம் இடையே என்ன கெமிஸ்ட்ரி உள்ளது, எப்படி இருவரும் எல்லா இடங்களில் சந்தித்துக்கொள்கிறார்கள், எதும் ஜிபிஎஸ் வச்சிருக்காய்ங்களா எனவும் கலாய்த்துள்ளார்.

அதேபோல், பொன்னியின் செல்வன் 2வில் யார் ஆற்றில் விழுந்தாலும் அவர்களை ஒரு ஆயா வந்து காப்பாற்றுகிறது என ஐஸ்வர்யா ராய்யை பங்கமாக கலாய்த்துள்ளார். மேலும் அந்த ஆயா (ஐஸ்வர்யா ராய்) என்ன சூப்பர் வுமனா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். படம் முழுக்க ரொம்பவே செயற்கையாக இருந்ததாகவும், கடந்த வாரம் வெளியான யாத்திசை படத்தை விடவும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொன்னியின் செல்வன் 2 படத்தின் கேரக்டர்கள் எதுவுமே மனதில் ஒட்டவில்லை. பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு இந்தப் படம் செம்ம மொக்கை என்றும், இதையா எம்ஜிஆரும் கமலும் படமாக எடுக்க நினைத்தார்கள் என கேட்பார்கள். பொன்னியின் செல்வன் நாவல் படிக்காதவர்களுக்குக் கூட இந்தப் படம் செட்டாகாது. மொத்தமாக இந்த பருத்தி மூட்டை குடோவுன்லயே இருந்திருக்கலாம் மொமண்ட் தான் என விமர்சித்துள்ளார் ப்ளு சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X