Ponniyin Selvan 2 Box Office: வாரிசு, துணிவின் முதல் நாள் வசூலை முந்துமா பொன்னியின் செல்வன் 2?

சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் குவிந்து வருகின்றன.

பொன்னியின் செல்வன் முதல் பாகமே வசூலை வாரிக் குவித்த நிலையில், இரண்டாம் பாகமும் அதே அளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தால் பாக்ஸ் ஆபிஸில் இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட் உறுதி என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Ponniyin Selvan 2 Box Office Predictions are here

500 கோடி வசூல்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2.0 படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் 500 கோடி கிளப்பில் இணைந்த ஒரே படம் பொன்னியின் செல்வன் தான். லைகா மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரித்த இந்த கனவு படத்தை மணிரத்னம் தனது குழுவுடன் செதுக்கி உள்ளார்.

விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களே 500 கோடி எனும் இமாலய வசூலை இதுவரை எட்டாத நிலையில், சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் அசுர வேட்டை நடத்தி அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது.

1000 கோடி வசூல் வருமா?: கேஜிஎஃப் முதல் பாகம் 250 கோடி வசூல் செய்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் 1200 கோடி வசூல் வேட்டையை நடத்தியது. பாகுபலி முதல் பாகம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்திய நிலையில், 2ம் பாகம் 1800 கோடி வசூலை குவித்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 கோடி வசூலை வாரிய நிலையில், பொன்னியின் செல்வன் 2 கண்டிப்பாக 1000 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பான் இந்தியா அளவில் படத்திற்கு ரீச் கிடைக்குமா? என்கிற பெரிய கேள்விக்குறி உள்ள நிலையில், முதல் பாகத்தின் வசூலை நெருங்கினாலே பெரிய விஷயம் என்றே பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Ponniyin Selvan 2 Box Office Predictions are here

துணிவு, வாரிசு வசூலை முந்துமா?: இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட படங்கள் முதல் நாளில் 30 கோடியை நெருங்கிய நிலையில், பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் 30 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்திற்கு அதிகாரப்பூர்வமாக வசூல் சாதனையை லைகா நிறுவனம் அறிவித்ததை போலவே இந்த படத்துக்கும் அறிவிக்கும் என நம்புவோம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X