Ponniyin Selvan 2 - பொன்னியின் செல்வன் 2 புரோமோஷன்.. ரோட்டில் சோழர்கள் - என்ன இப்டி இறங்கிட்டாங்க?

மும்பை: Ponniyin Selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்காக படக்குழு இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக மாற்றியிருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

Ponniyin Selvan 2 Crew eating kulfi ice in mumbai that pictures gone viral

பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இந்த பாகமும் பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாக இன்னும் 8 நாள்களே இருப்பதால் படக்குழு இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். சமீபத்தில்கூட பொன்னியின் செல்வன் Anthem வெளியிடும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

Ponniyin Selvan 2 Crew eating kulfi ice in mumbai that pictures gone viral

லைகாவுக்கு விக்ரம் வைத்த கண்டிஷன்: இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடம் விக்ரம் ஒரு கண்டிஷன் வைத்ததாக கூறப்பட்டது. அதாவது, நாங்கள் புரோமோஷனுக்கு வர வேண்டுமென்றால் தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கூறியதாக தகவல்கள் வெளியானது. மேலும் அந்த விமானத்திற்காக இதுவரை ஒரு கோடி ரூபாய் அளவில் செலவாகியிருப்பதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது.

தஞ்சாவூரில் புரோமோஷன்: அதேபோல் கோவா, டெல்லி, மும்பை, கோயம்புத்தூர் என புரோமோஷனுக்காக ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பறந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய தஞ்சாவூருக்கு மட்டும் செல்லவில்லை. இது விவாதத்தை கிளப்ப இந்த முறை புரோமோஷனுக்காக தஞ்சாவூர் செல்லும் திட்டம் இருப்பதாக கார்த்தி சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan 2 Crew eating kulfi ice in mumbai that pictures gone viral

மும்பை பறந்த சோழர்கள்: கடந்த வாரம் கோயம்புத்தூரில் புரோமோஷனை முடித்த படக்குழுவினர் சில நாள்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றனர். அங்கு நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா, சோபிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின. இதனையடுத்து படக்குழு மும்பைக்கு சென்றது.

குல்பியால் கூலான சோழர்கள்: இந்நிலையில் மும்பைக்கு சென்ற படக்குழுவினர் அங்கு சாலையில் விற்கப்பட்ட குல்பி ஐஸை வாங்கி சாப்பிட்டிருக்கின்றனர். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும், கொளுத்தும் வெயிலில் சோழர்கள் குல்பி சாப்பிட்டு கூல் ஆகின்றனர் எனவும்; படத்தின் புரோமோஷனுக்காக இப்படி படக்குழு ரோட்டில் இறங்கிவிட்டதே எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X