த்ரிஷா முன் மண்டியிட்ட கார்த்தி... ரசிகர்களை நடுநடுங்க வைத்த பொன்னியின் செல்வன் 2 அப்டேட்!
சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது.
முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் இறுதியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் மிக முக்கியமான அப்டேட்டை வித்தியாசமான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் 2
தமிழ்த் திரையுலகின் கனவுத் திரைப்படமாக சொல்லப்பட்ட பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 ரிலீஸாகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

த்ரிஷா முன் மண்டியிட்ட கார்த்தி
அதன்படி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இருந்து வரும் 20ம் தேதி மாலை 6 மணிக்கும் முதல் பாடல் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 'பொன்னி நதி' புகழ் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள 'அக நக' எனத் தொடங்கும் இந்தப் பாடலை சக்திஸ்ரீ பாடியுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. முக்கியமாக இந்த அப்டேட்டுக்காக வெளியான போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அதில், கார்த்தியின் கண்கள் கட்டப்பட்டு த்ரிஷாவின் முன் மண்டியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்
குந்தவை த்ரிஷா கையில் வாளுடனும் வந்தியத்தேவன் கார்த்தி கண்களை கட்டிக் கொண்டு மண்டியிட்டு இருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தியும் த்ரிஷாவும் சந்திக்கும் காட்சியின் பின்னணியில் 'அக நக' என மெல்லிதாக ஒரு இசை துணுக்கு ஒலிக்கும். அதன் முழுமையான வெர்ஷன் தான் பொன்னியின் செல்வன் 2வில் முதல் பாடலாக வெளியாவதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விரைவில் ஆடியோ வெளியீடு
20ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் 2 முதல் பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா இம்மாதம் இறுதி அல்லது ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. அதோடு பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரும் பிரம்மாண்டமாக வெளியிடப்படுகிறதாம். முதல் பாகத்திற்கு நடைபெற்றதை போன்றே P S 2 இசை வெளியீடும் ரசிகர்கள் முன்னிலையில் ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரியுடன் நடைபெறுவதும் உறுதியாகியுள்ளது.

பாரதிராஜாவை சந்தித்த மணிரத்னம்
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி, கமல், இயக்குநர் ஷங்கர் உள்ள்ட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோல், இரண்டாம் பாகத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் களைக்கட்டும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவை மணிரத்னம் நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இது பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்தும் விரைவில் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications