பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களுக்கு இத்தனை கோடி சம்பளமா... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லிஸ்ட்
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் சம்பள பட்டியல்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியான நிலையில், தற்போது இரண்டாம் பாகம் ரிலீஸாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரமுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அவரை அடுத்து இசைப் புயல் ஏஆர் ரஹ்மானுக்கும் 12 கோடி ரூபாய் சம்பளம் என சொல்லப்படுகிறது.
விக்ரம், ஏஆர் ரஹ்மானுக்கு அடுத்தபடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்குதான் அதிக சம்பளம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நந்தினி, ஊமை ராணி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடி ரூபாய் சம்பளம் என தெரிகிறது. தற்போது நடிப்பில் அதிக ஆர்வம் காட்டாத ஐஸ்வர்யா ராய், மணிரத்னத்துக்காக தான் பொன்னியின் செல்வனில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் பொன்னியின் செல்வன் படத்துக்காக ஜெயம் ரவி 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். அருள்மொழி வர்மன், பொன்னியின் செல்வர் என்ற நாவலின் நாயகன் பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அதேபோல், வந்தியத் தேவனாக நடித்த கார்த்தி 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. கார்த்தியின் கேரியரில் வந்தியத்தேவன் கேரக்டர் எப்போதும் பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.
குந்தவையாக நடித்த த்ரிஷாவுக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். கடந்த சில வருடங்களாக ஃபீல்ட் அவுட் ஆகியிருந்த த்ரிஷா குந்தவை கேரக்டர் மூலம் கம்பேக் கொடுத்தார். இதனால், அடுத்து விஜய்யுடன் லியோ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு ஆகியோர் தலா 1.5 கோடியும், ஷோபிதா துலிபலா, பிரபு ஆகியோர் தலா 1 கோடி ரூபாயும் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் தவிர விக்ரம் பிரபு, ரகுமான், ரியாஸ்கான், கிஷோர் உள்ளிட்ட மற்ற நடிகர்களுக்கு 1 கோடிக்கு குறைவாகவே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் லட்சங்கள், கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். இயக்குநர் மணிரத்னம் தனது சம்பளத்தை லாபத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியாக ஷேர் செய்துகொள்வார் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











