PS 2: அய்யய்யோ ஐமேக்ஸ் புட்டுக்கிச்சா... பொன்னியின் செல்வன் 2 பார்க்கச் சென்ற விக்ரம் ஏமாற்றம்!
சென்னை: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம், கடந்தாண்டு ரிலீஸானது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் 2 பார்க்கச் சென்ற விக்ரம் ரொம்பவே ஏமாற்றம் அடைந்துள்ளார்.

அய்யய்யோ ஐமேக்ஸ் புட்டுக்கிச்சா:மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹோபிதா துலிபலா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரஹ்மான் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் கொடுத்த வெற்றியால், இரண்டாம் பாகம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உண்மையாக்கியுள்ளது பொன்னியின் செல்வன் 2ம் பாகத்துக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு. பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் வாரம் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் பொன்னியின் செல்வன் 2 வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பொன்னியின் செல்வன் 2 படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. 2டி-யில் பார்ப்பதை விடவும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமும் இந்தப் படத்தை ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் பார்ப்பதற்காக சென்னை வடபழனியில் உள்ள Palazzo திரையரங்குகளுக்குச் சென்றார்.
பத்திரிகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஸ்பெஷல் ஷோவில் நடிகர்கள் விக்ரம், ஜெயராம் ஆகியோரும் பங்கேற்றனர். ஆனால், ஐமேக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பொன்னியின் செல்வன் 2 படத்தை திரையிட முடியவில்லை. இதனால் விக்ரம், ஜெயராம் உட்பர அனைவருமே ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து சாதாரண திரையில் பொன்னியின் செல்வன் 2 திரையிடப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2 படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விக்ரம் அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். திரையில் ஆதித்த கரிகாலனாக மிரட்டிய விக்ரம், தியேட்டரில் தங்கலான் கெட்டப்பில் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். விக்ரமை தொடர்ந்து ஜெயராம் உடனும் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் பளாஸோ திரையரங்கில் ரசிகர்கள் உற்சாகமாக வலம்வந்ததை பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications











