காதலர் தினத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 பர்ஸ்ட் சிங்கிள்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர் உள்ளிட்டவற்றை படக்குழுவினர் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாடலாக ஜெயம் ரவியின் காதல் பாடல் வெளியாகவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருந்த நிலையில், வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்தது.

கனவுப் படைப்பு
மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படம் நீண்ட முயற்சிகளுக்கு பிறகே வெளியானது. படம் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களை சர்வதேச அளவில் கவர்ந்தது. லைகாவுடன் இணைந்து மணிரத்னமும் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் 2 படம்
முன்னணி நடிகர்களின் நடிப்பை இந்தப் படத்தில் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருந்தார் இயக்குநர் மணிரத்னம். படத்தில் த்ரிஷா உள்ளிட்டவர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம், முன்னதாகவே எடுக்கப்பட்டு, தற்போது சிஜி வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்
தற்போது இரண்டாவது பாகத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையொட்டி படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டமாக, படத்தின் முதல் பாடல் இம்மாதத்திலேயே வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பர்ஸ்ட் சிங்கிள்
இதனிடையே பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலாக அருண்மொழி வர்மன் -வானதியின் காதல் பாடல் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானே பாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கோரிக்கை
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான பிரமோஷனை ஒரு மாதத்திற்கு முன்னதாக துவங்கி முழுவீச்சில் படக்குழுவினர் நடத்தினர். இதேபோல, இரண்டாவது பாகத்திற்கான பிரமோஷனையும் படக்குழு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக படத்தின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவிற்கு கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











