PS2 :பறந்து பறந்து வேலை பார்க்கும் மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் 2 படத்தின் மேக்கிங் வீடியோ!
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது பொன்னியின் செல்வன் 2 படம்.
இந்தப் படம் முதல் பாகத்தை போல ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பை பெறாமல் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
ஆனாலும் வசூலில் 300 கோடி ரூபாயை இந்தப் படம் தாண்டியுள்ளது. தொடர்ந்து முதல் பாகத்தை இந்தப் படம் பீட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 மேக்கிங் வீடியோ : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஷோபிதா, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது பொன்னியின் செல்வன் 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியான நிலையில், படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் இரு பாகங்களையும் வெறும் 155 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இத்தகைய பிரம்மாண்டத்துடன் இவ்வளவு குறுகிய நாட்களில் படத்தை இயக்குவது சாத்தியமா என்ற கேள்விகளை இந்தப் படம் எழுப்பியுள்ளது. ஆனால் இதை சாத்தியப்படுத்தியுள்ளார் மணிரத்னம். இந்தப் படம் நாவலாகவே அனைவரையும் கவர்ந்த நிலையில், அதை தன்னுடைய படைப்பில் ஈடு செய்துள்ளார் மணிரத்னம்.

இந்தப் படத்தின் நடிகர், நடிகைகளும், அந்த கேரக்டருடன் சிறப்பாக பொருந்தியிருந்தனர். அவர்களது உடல்மொழி உள்ளிட்டவை படத்திற்கு சிறப்பாக பொருந்தியது. இந்த நாவலை படித்தவர்கள், தங்களின் மனதில் அந்த கேரக்டர்கள் குறித்து சில பிம்பங்களை வைத்திருப்பார்கள். அந்த கற்பனைக்கு இந்த படத்தின் நடிகர்கள், தங்களது நடிப்பால் வடிவம் கொடுத்துள்ளனர். மேலும் படத்திற்கான பிரமோஷனையும் அவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்தப் படத்திற்காக அவர்கள் அனைவரும் எப்படியெல்லாம் உழைத்துள்ளனர் என்பதை தெரிவிக்கும் வகையில், படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. படம் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இந்த மேக்கிங் வீடியோவும் அதற்கு மேலும் உறுதுணையாக அமைந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்டவர்கள் அதிகமான உழைப்பை போட்டுள்ளது இந்த வீடியோவில் தெரிகிறது.

முக்கியமாக படத்தின் இயக்குநர் மணிரத்னம், ஒவ்வொருவருக்கும் காட்சிகளை விளக்கி, அவர்களிடம் வேலை வாங்கியுள்ளதும் இந்த வீடியோவில் தெரிகிறது. அவர்களுக்கு முன்னதாக மணிரத்னம், சிறுபிள்ளை போல, ஓடி ஓடி அந்தக் காட்சிகளில் நடித்து காட்டுகிறார். இந்த வயதில் அவரிடம் உள்ள இந்த எனர்ஜி, வீடியோவை பார்க்கும்போது வியப்பை ஏற்படுத்துகிறது. அவரது விவரிப்பை சரியாக உள்வாங்கி படத்தின் நடிகர்கள் சிறப்பாக நடிப்பதும் வீடியோவில் தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











