PS 2 Chinnanjiru Nilave - சின்னஞ்சிறு நிலவே.. பொன்னியின் செல்வன் 2 அசத்தல் மெலோடி

சென்னை: Chinnanjiru Nilave (சின்னஞ்சிறு நிலவே) பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் சின்னஞ்சிறு நிலவே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். புத்தக திருவிழாவில் பொன்னியின் செல்வனை வாங்கும் அளவு அந்த நாவல் மீதான ஈர்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம். அவருக்கு லைகா துணை நிற்க படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Ponniyin Selvan 2 Movies Chinnanjiru Nilave Song Lyrical Video is out now

பொன்னியின் செல்வன் 1: ஐந்து பாகங்கள் கொண்ட நாவல் திரைப்படமாக இரண்டு பாகங்களாக படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகமானது கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அருண்மொழி சோழன் கடலுக்குள் விழுவது போலவும், அவரை ஊமை ராணி காப்பாற்றுவது போலவும் முதல் பாகம் முடிவடைந்திருந்தது.

பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. கமல் ஹாசன், சிம்பு, பாரதிராஜா, குஷ்பூ என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ட்ரெய்லருக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனத்தயே கொடுத்தனர். அதேசமயம் படத்தின் மீது அவர்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

புரோமோஷனில் தீவிரம்: படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக விக்ரம் (ஆதித்ய கரிகாலன்), ஜெயம் ரவி (அருண்மொழி சோழன்), கார்த்தி (வந்திய தேவன்), த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா (வானதி) ஆகியோர் தனி விமானம் மூலம் பறந்து பறந்து புரோமோஷன் செய்துவருகின்றனர். விரைவில் தஞ்சாவூருக்கு செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னஞ்சிறு நிலவே லிரிக்கல் வீடியோ: இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் சின்னஞ்சிறு நிலவே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுத ஹரிசரண் பாடியிருக்கிறார். இந்தப் பாடலானது நந்தினியையும், ஆதித்ய கரிகாலனையும் மையப்படுத்தி படத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ponniyin Selvan 2 Movies Chinnanjiru Nilave Song Lyrical Video is out now

கவனம் ஈர்த்த மற்ற பாடல்கள்: முன்னதாக, பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருந்த அக நக பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. பாடலை இளங்கோ கிருஷ்ணன் பாடல் சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருந்தார்.

முழுக்க முழுக்க ப்யூட் மெலோடியாக உருவாகியிருந்தது அந்தப் பாடல். அதேபோல், ஜெயம் ரவி ஏற்றிருக்கும் அருண்மொழி சோழன் கதாபாத்திரத்தை (ராஜராஜ சோழன்) புகழும்படியான வீரா ராஜ வீர என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவும், சிவஹோம் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X