PS 2 : பாதியில் நிறுத்தப்பட்ட பொன்னியின் செல்வன் 2… அதிருப்தி அடைந்த ரசிகர்கள் !

சென்னை : ரெட்ஹில்ஸில் உள்ள பிவிஆர் திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொன்னியின் செல்வன் 2 படம் பாதியில் நிறுத்தப்பட்டது

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான படத்தை ரசிகர்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்து வருகின்றனர்.

Ponniyin Selvan 2 movie was stopped due to a technical problem at Redhills PVR mall

பொன்னியின் செல்வன் 2 : கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி,நாசர், பிரபு, விக்ரம் பிரபு என பல முன்னணி நடிகர் நடித்துள்ளனர்.

வரலாற்றை தெரிந்து கொள்ளும் : வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காதவர்களும் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூட்டம் கூ ட்டமாக திரையரங்குக்கு படை எடுத்ததால், முதல் பாகம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இன்று இரண்டாவது பாகம் வெளியானது.

ஊமை ராணி யார் : பொன்னியின் செல்வனுக்கு என்ன ஆனாது? நந்தினியின் சூழ்ச்சி வென்றதா? அந்த ஊமை ராணி யார்? என்ற பல கேள்விக்கு விடையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் இன்று காலை முதலே திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்தனர். கோடை விடுமுறை என்பதால் பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளை குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்தனர்.

Ponniyin Selvan 2 movie was stopped due to a technical problem at Redhills PVR mall

படம் பாதியில் நிறுத்தப்பட்டது : இந்நிலையில் ரெட்ஹில்ஸில் உள்ள பிவிஆர் திரையரங்கில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டது. படம் நிறுத்தப்பட்டு சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலானதால், பிவிஆர் மேலாளர் தியேட்டருக்குள் வந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுசரியாக அன்னும் 20 நிமிடம் ஆகும், நேரமாகிறது என்றால் உங்களுக்கான பணத்தை திரும்ப தந்துவிடுகிறோம், சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று கூறினார். இதையடுத்து, முக்கால் மணி நேரம் தாமதமாக கோளாறு சரி செய்யப்பட்டு படம் திரையிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X