ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரப்போகும் PS 2 Sound Track... இசை வெளியீட்டு விழாவுக்கு தேதி கன்ஃபார்ம்!
சென்னை: பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.
முன்னதாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 5ம் தேதி பொன்னியின் செல்வன் பாடல்களும் ட்ரெய்லரும் வெளியிடப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் இசை விழா
கோலிவுட்டின் கனவுப் படம் என சொல்லப்பட்ட பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சித் தரும் P S 2 சவுண்ட் ட்ராக்
அதன்படி ஏப்ரல் 5ம் தேதி பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்படுகிறது. அதோடு பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரும் பிரம்மாண்டமாக வெளியிடப்படுகிறதாம். முதல் பாகத்திற்கு நடைபெற்றதை போன்றே P S 2 இசை வெளியீடும் ரசிகர்கள் முன்னிலையில் ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரியுடன் நடைபெறுகிறதாம். இதனிடையே இரண்டாம் பாகத்தில் மொத்தமே 3 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் அபிஸியல் அப்டேட்
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றன. பொன்னி நதி, சோழா சோழா, தேவராளன் ஆட்டம், ராட்சச மாமனே, அலைகடல், சொல் என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வெரைட்டியில் ரசிகர்களை மயக்கியது. ஆனால், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் 3 பாடல்கள் தான் என வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ட்ரெய்லரில் மிரட்டுமா P S 2?
இன்னொரு பக்கம் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் படு மிரட்டலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை விடவும் இதில் பல ட்விஸ்ட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ராஜமெளலி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications