PS 2 இசை வெளியீட்டு விழாவுக்கு ரெடியாகும் பொன்னியின் செல்வன் டீம்... ஸ்பெஷல் கெஸ்ட் யார்..?

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.

மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

இதனையடுத்து பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

 பொன்னியின் செல்வன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்

பொன்னியின் செல்வன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்

தமிழ்த் திரையுலகின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவானது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. இதனிடையே 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விரைவில் இசை வெளியீட்டு விழா

விரைவில் இசை வெளியீட்டு விழா

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் ராஜராஜ சோழனான ஜெயம் ரவியும், வந்தியத்தேவன் கார்த்தியும் கடலில் மூழ்குவதாக முடிந்திருந்தது. இதனையடுத்து சோழர்களின் சாம்ராஜ்யம் என்ன ஆனது என்பது தான் இரண்டாம் பாகத்தின் கதை என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

 ஸ்பெஷல் கெஸ்ட் யார்?

ஸ்பெஷல் கெஸ்ட் யார்?

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்தாண்டு செப்டம்பர் 6ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், இயக்குநர் ஷங்கர் உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், பொன்னியின் செல்வன் ட்ரெய்லர், ரஜினி, கமல் முன்னிலையில் வெளியிடப்பட்டது. முன்னதாக பொன்னியின் செல்வன் மேடையில் ஏறிய ரஜினி, கமல் இருவரும் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனால் இரண்டாம் பாகத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியின் கெஸ்ட் யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸான அப்டேட்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸான அப்டேட்

இதுவரை கிடைத்த தகவல்களின் படி பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீடு, மார்ச் மாதம் நடைபெறும் என சொல்லப்படுகிறது. ஏஆர். ரஹ்மானின் தேதிக்காக தான் படக்குழு இன்னும் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் கொடுக்காமல் உள்ளதாம். அதேபோல் கடந்தமுறை ரஜினி, கமல், ஷங்கர் ஆகியோரை வரவைத்த படக்குழு, இந்த முறையும் உச்ச நட்சத்திரங்களை விழாவில் பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

 அமிதாப்பச்சன், ஷாருக்கான், ராஜமெளலி?

அமிதாப்பச்சன், ஷாருக்கான், ராஜமெளலி?

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமிதாப்பச்சன், ராஜமெளலி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை என்பதால், இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் அது சாத்தியமாகும் என சொல்லப்படுகிறது. அமிதாப்பச்சன், ஷாருக்கான், ராஜமெளலி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X