PS2: சேந்தன் அமுதனுக்கு சேர வேண்டியது.. மணிரத்னம் மோசம் செய்து விட்டார்.. ரசிகர்கள் வருத்தம்!

சென்னை: பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிளைமேக்ஸில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் மணிரத்னம் அநீதி இழைத்து விட்டார் என நடிகர் அஸ்வின் காக்கமனு ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி உள்ளார் மணிரத்னம்.

திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்க வேண்டி சில மாற்றங்களை அவர் கதையில் மாற்றி இருப்பது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி உள்ளது.

Ponniyin Selvan 2: Novel readers upset over Maniratnam due to Sendhan Amudhan character sketch

அஸ்வின் காக்கமனு ட்வீட்: பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்தில் ஒரு சிறு பகுதியாக தானும் இருந்தது மிக்க மகிழ்ச்சி என்றும் இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற பக்கெட் லிஸ்ட் ஆசை நிறைவேறிவிட்டது. தியேட்டர்களுக்குச் சென்று பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்து கொண்டாடுங்கள் என பொன்னியின் செல்வன் படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடித்த அஸ்வின் காக்கமனு ட்வீட் போட்டுள்ளார்.

Ponniyin Selvan 2: Novel readers upset over Maniratnam due to Sendhan Amudhan character sketch

அந்த ட்வீட்டுக்கு கீழ் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை இயக்குநர் மணிரத்னம் மோசம் செய்து விட்டார் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

உங்க ட்விஸ்ட் மிஸ் ஆகிடுச்சு: பொன்னியின் செல்வன் நாவலை படித்த அனைவருக்கும் தெரியும் சேந்தன் அமுதன் யார் என்பதும் அவருக்கான கிளைமேக்ஸ் ட்விஸ்ட் என்ன என்பதும். ஆனால், இயக்குநர் மணிரத்னம் நேரமின்மை காரணமாக அதை மாற்றினாரா? அல்லது கல்கி எழுதியதிலேயே அவருக்கு உடன்பாடு இல்லையா? என்கிற கேள்வி தான் அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Ponniyin Selvan 2: Novel readers upset over Maniratnam due to Sendhan Amudhan character sketch

கடைசியில பல்பு: முதல் பாகத்திலேயே ஜெயச்சித்ரா சேந்தன் அமுதனை அக்கறையுடன் பார்க்கும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதே போல குந்தவையுடன் நெருங்கி பழகும் நட்பும் அவருக்கு கிடைத்ததாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், இரண்டாம் பாகத்தில் அப்படியே அவரது கதாபாத்திரத்தை மணிரத்னம் விட்டு விட்டது சேந்தன் அமுதன் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. கடைசியில பல்பு கொடுத்துட்டாங்க போல என இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.

Ponniyin Selvan 2: Novel readers upset over Maniratnam due to Sendhan Amudhan character sketch

சேந்தன் அமுதனுக்கு சேர வேண்டியது: சோழ தேசத்து மணிமகுடமே சேந்தன் அமுதனுக்குத்தான் சேர வேண்டியது. ஆனால், படத்தில் இப்படியொரு கிளைமேக்ஸை இயக்குநர் மணிரத்னம் வைப்பார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது கல்கியின் பொன்னியின் செல்வன் கிடையாது. மணிரத்னத்தின் ஆதித்த கரிகாலனின் மோகம் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X