மேஜிக் கன்ஃபார்ம்.. பொன்னியின் செல்வன் 2 ரீ ரெக்கார்டிங் எங்கு நடக்கிறது தெரியுமா?
லண்டன்: பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் ரீ ரெக்கார்டிங் குறித்த புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் தீவிர முயற்சிக்கு பிறகு திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய அளவில் முக்கிய இயக்குநந்ர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

திரைப்படமான பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் நாவல் மொத்தம் ஐந்து பாகங்கள் இருக்கும். ஆனால் அவ்வளவையும் மணிரத்னம் இரண்டு பாகங்களாக சுருக்கி திரைப்படமாக மாற்றியிருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூலித்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக மட்டுமின்றி பொன்னியின் செல்வன் நாவலை சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார் மணிரத்னம் என விமர்சன ரீதியாகவும் படம் கொண்டாடப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்
முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து இரண்டாவது பாகம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் முதல் படத்தில் இருந்த சின்ன சின்ன சொதப்பல்கள் இந்தப் படத்தில் இருக்காது எனவும் அவர்கள் நம்பியிருக்கின்றனர். படமானது ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூலித்ததால் அதைவிட அதிகமான வசூலை பொன்னியின் செல்வன் 2 ஈட்டும் என கருதப்படுகிறது.

வரவேற்பைப் பெற்ற அக நக பாடல்
இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடல் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியானது. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அவரது ஆஸ்தான பாடகியான சக்திஸ்ரீ கோபாலன் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

லண்டனில் ரீ ரெக்கார்டிங்
அக நக பாடலை கேட்ட ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் பக்கா மெலோடியாக உருவாக்கியிருக்கிறார். பாடலே இப்படி என்றால் படத்துக்கான பின்னணி இசை எப்படி இருக்கும் என வியந்தபடி சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரீ ரெக்கார்டிங் தொடர்பான தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் ரீ ரெக்கார்டிங்கானது லண்டனில் இருக்கும் அபே ரோட் ஸ்டூடியோஸில் நடந்துவருகிறது.

ரீ ரெக்கார்டிங்கில் வித்தை இருக்கு
அந்த ஸ்டூடியோவின் முன் மணிரத்னத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இதனைப் பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றின் பின்னணி இசையில் ஏ.ஆர். ரஹ்மான் மேஜிக் செய்திருந்தார். அதனை விஞ்சும் விதமாக பொன்னியின் செல்வன் 2 பின்னணி இசை அமையப்போகிறது என உற்சாகத்துடன் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











