Ponniyin Selvan 2 - பொன்னியின் செல்வன் 2.. வெளியானது சிவோஹம் லிரிக்கல் வீடியோ
சென்னை: Ponniyin Selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் சிவோஹம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது கற்பனையையும் சேர்த்து தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. பொன்னியின் செல்வன் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

ஆரம்பித்த மணிரத்னம்: பொன்னியின் செல்வன் நாவலை எப்படியாவது திரைப்படமாக பார்த்துவிட வேண்டும் என நாவலை படித்தவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதற்கான முயற்சியில் எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோர் இறங்கினர். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தச் சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வனில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்தது. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது. இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. கமல் ஹாசன் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.
புதிய தொழில்நுட்பம்: ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாகவிருப்பதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் படம் பொன்னியின் செல்வன் 2 என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது. படம் ஏற்கனவே சூப்பர் அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு 4DX தொழில்நுட்பத்தில் பார்த்தால் மேற்கொண்டு புது அனுபவமாக இருக்கும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

லிரிக்கல் வீடியோ: இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் சிவோஹம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தெய்வீக பாடலாக உருவாகியிருக்கும் இப்பாடலை சத்யபிரகாஷ், நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், அரவிந்த் ஸ்ரீநிவாஸ், செண்பகராஜ், டி.எஸ்.அய்யப்பன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர்.
மற்ற பாடல்கள்: இதற்கிடையே பொன்னியின் செல்வன் 2வில் இடம்பெற்றிருக்கும் அக நக மற்றும் வீரா ராஜ வீர பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகியும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் அக நக பாடல் குந்தவைக்கும் வந்தியத்தேவனுக்கும் இடையே இருக்கும் காதலை மையமாக வைத்தும்; வீரா ராஜ வீர பாடல் அருண்மொழி சோழனை புகழ்ந்தும் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











