Ponniyin Selvan 2 Box Office: 250 கோடி கிளப்பில் இணைந்த பொன்னியின் செல்வன் 2.. ஆனால், அது நடக்குமா?

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகிறது.

கடந்த 6 நாட்களில் முதல் 4 நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி வசூல் ஈட்டியதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

Ponniyin Selvan 2 Six Day Box Office Collection is here

ஆனால், செவ்வாய்க்கிழமை முதல் படத்தின் வசூல் சரிவடைய தொடங்கி உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 வசூலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன் 2 வசூல்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகத்தின் வசூல் எல்லாமே கூடுதல் போனஸாகவே தயாரிப்பு தரப்பு இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இரண்டாம் பாகமும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ரசிகர்களை ரொம்ப நாட்கள் காக்க வைக்காமல் உடனடியாக 2ம் பாகம் வெளியான நிலையில், முதல் நான்கு நாட்களில் 200 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை உலகளவில் பொன்னியின் செல்வன் 2 ஈட்டியது.

Ponniyin Selvan 2 Six Day Box Office Collection is here

250 கோடி கிளப்: 4 நாட்களில் 200 கோடி வசூல் ஈட்டிய பொன்னியின் செல்வன் 2 அடுத்த 2 நாட்களில் மேலும், 100 கோடி வசூல் செய்து 300 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்த்த நிலையில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் படத்தின் வசூல் அதிரடியாக குறைந்தது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக 6 நாட்களில் 255 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில், 300 கோடி வசூலை கடந்ததும் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

500 கோடி வசூல் கஷ்டம் தான்: பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 கோடி வசூல் ஈட்டிய நிலையில், 2ம் பாகம் 1000 கோடி வசூலை ஈட்டும் என படத்தில் நடித்த பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களே எதிர்பார்த்தனர்.

Ponniyin Selvan 2 Six Day Box Office Collection is here

ஆனால், இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸ் நாவல் ரசிகர்களையும் ஏமாற்றிய நிலையில், வசூல் அதிரடியாக குறைந்து விட்டது என்கின்றனர். 2ம் வார முடிவில் தான் 300 கோடி வசூலை படம் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து புதிய படங்கள் வெளியானால் மேலும், படத்தின் வசூல் குறையும் என்றும் அதிகபட்சமாக 350 கோடி தான் இந்த படம் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இரண்டு பாகங்களையும் சேர்த்து 850 கோடிக்கு மேல் வசூல் செய்தாலே அது பெரிய லாபம் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், 1000 கோடிக்கு மேல் இரண்டாம் பாகமே வசூல் செய்திருந்தால், இன்னொரு ஹிண்டஸ்ட்ரி ஹிட் ஆக அமைந்திருக்கும் என்றும் அது மிஸ் ஆனது மிகப்பெரிய இழப்பு தான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X