Ponniyin Selvan 2: ஆத்தாடி.. டிரான்ஸ்பரன்ட் சேலையில் பொன்னியின் செல்வன் நடிகைகள்.. சூடான இணையம்!

சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இருவரும் டிரான்ஸ்பரன்ட் சேலையை அணிந்து கொண்டு கொடுத்த போஸ் ரசிகர்களை கிக்கேற்றி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தில் பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். வானதியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார்.

இருவருமே நடிகர் ஜெயம் ரவியின் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தை காதலிக்கும் காதலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan 2 stars Sobhita Dhulipala and Aishwarya Lekshmi stuns in transparent saree pics

சமுத்திரகுமாரி பூங்குழலி: பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் போதே சமுத்திரகுமாரி பூங்குழலி ஒரே இரவுக்குள் படகு மூலம் பொன்னியின் செல்வரை இலங்கைக்கு அழைத்துச் சென்ற நிகழ்வுகளும், யானையை பயமுறுத்தி பூங்குழலி உடன் பொன்னியின் செல்வர் படையினரிடம் இருந்து தப்பித்து காட்டுக்குள் செல்லும் காட்சிகளும் என்றுமே நீங்காமல் நிறைந்திருக்கும்.

இயக்குநர் மணிரத்னம் அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை தேர்வு செய்த நிலையில், கடலில் இருந்து மீனை பிடித்துக் கொண்டு சொட்டச் சொட்ட நனைந்தபடி படகில் அவர் ஏறும் அந்த முதல் ஷாட்டே ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.

வந்தியத்தேவனை இலங்கையில் கொண்டு விடும் போது தான் அருள்மொழி வர்மனை மானசீகமாக காதலிப்பதை அவர் வெளிப்படுத்தி இருப்பார். அந்த காட்சிகளில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் நடிப்பு அட்டகாசம்.

Ponniyin Selvan 2 stars Sobhita Dhulipala and Aishwarya Lekshmi stuns in transparent saree pics

பொன்னியின் செல்வனுக்காகவே பிறந்த வானதி: மறுமுனையில் அருள்மொழி வர்மனின் அக்கா அவருக்காக தனது தோழி வானதியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருப்பார்.

பொன்னியின் செல்வருக்காகவே பிறந்தவள் வானதி என்றே அரசாங்கத்தில் உள்ள அனைவரும் வானதியை உச்சிக் குளிர வைத்திருப்பர். பயந்த சுபாவம் கொண்டவளான வானதி ராட்சச மாமனே பாடலில் கம்சனை அழிக்கும் கிருஷ்ணனாக மிரட்டி இருப்பார்.

நடிகை சோபிதா துலிபாலா வானதியாக ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகு பதுமையாக வந்து செல்கிறார். முதல் பாகத்தில் அவருக்கு பெரியளவில் வேலை இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் காட்சிகள் நிறைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரான்ஸ்பரன்ட் சேலையில் சோபிதா: இந்நிலையில், வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலா வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் சேலையில் செம ஹாட்டாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.

கடந்த ஒரு மாதமாக பொன்னியின் செல்வன் குழுவுடன் ஒவ்வொரு நகரத்துக்கும் சென்று பொன்னியின் செல்வன் 2 பட ப்ரோமோஷனில் பங்கேற்று வருகிறார் சோபிதா துலிபாலா.

ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் செம ஹாட்: சோபிதா துலிபாலவை தொடர்ந்து அவரை போலவே நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் சேலையை அணிந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார்.

Ponniyin Selvan 2 stars Sobhita Dhulipala and Aishwarya Lekshmi stuns in transparent saree pics

இன்ஸ்டாகிராமில் இந்த இரு பொன்னியின் செல்வன் நடிகைகளும் கவர்ச்சி விருந்து கொடுத்து சம்மரை மேலும் சூடாக்கி வருகின்றனர். ஜெயம் ரவி சார் இதையெல்லாம் கேட்கமாட்டீங்களா? என நெட்டிசன்களும் வித விதமாக கமெண்ட்டுகளை போட்டு ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மற்றும் சோபிதா துலிபாலாவின் அழகினை ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X