PS2 tour : டெல்லி பிரமோஷனலில் மல்லுக்கட்டிய கார்த்தி - ஷோபிதா.. எதவச்சின்னு பாருங்க!

டெல்லி : நடிகர்கள் கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் 2 படம்.

பலரது ஆசை மற்றும் கனவுகளை தாண்டி இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். அவருக்கே இந்தப் படத்தை எடுக்கும் சாத்தியம் இருந்துள்ளது.

இந்தப் படத்தின் பிரமோஷனல் டூரில் தற்போது படத்தின் நடிகர், நடிகைகள் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் கொச்சிக்கு பயணமாகியுள்ளனர்.

Ponniyin selvan 2 team chill with icecream in their delhi promotional tour

ப்பா.. வெயில் தாங்க முடியலை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் கைவண்ணத்தில் நாவலாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பொன்னியின் செல்வன் தற்போது இயக்குநர் மணிரத்னத்தால் திரைவடிவம் பெற்றுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் முதல் பலரது கனவுத் திரைப்படமாக அமைந்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் தற்போது திரைக்காவியமாக கொடுத்துள்ளார்.

Ponniyin selvan 2 team chill with icecream in their delhi promotional tour

படத்தின் சில பல விஷயங்கள் விவாதத்திற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக இந்த நாவலை, படமாக்கியதில் மணிரத்னம் ஸ்கோர் செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கே அவருக்கு அதிகமான பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் இன்னும் சில தினங்களில் ரசிகர்களை சந்திக்க உள்ளது.

பொன்னியின் செல்வன் படம் ஆஸ்கருக்கு செல்லுமா என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்தப் படம் அதற்காக உருவாக்கப்படவில்லை என்றும் கல்கியின் படைப்பு ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்ற தான் கருதியதன் விளைவாகவே இந்தப் படம், படமாக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்திருந்தார். ஆனால், படத்தின் பிரம்மாண்டம் உள்ளிட்டவை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்துக் கொடுத்துள்ளது.

Ponniyin selvan 2 team chill with icecream in their delhi promotional tour

முதல் பாகம் பிரம்மாண்டமான வெற்றியையும் வசூலையும் பெற்றுக் கொடுத்துள்ள நிலையில், இரண்டாவது பாகம் அதை முறியடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் பாகத்திற்கு செய்ததைப் போலவே இரண்டாவது பாகத்திற்கும் படத்தின் நடிகர்கள் பிரமோஷனல் டூரை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் துவங்கிய இவர்களது பயணம், கோவை, டெல்லியில் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக இன்றைய தினம் கேரளாவின் கொச்சியில் பிரமோஷன்கள் நடைபெறவுள்ளன. இதில் நடிகர் ஜெயராம் பங்கேற்கவுள்ளார்.

Ponniyin selvan 2 team chill with icecream in their delhi promotional tour

இந்நிலையில், டெல்லியில் அதிகமான வெயிலை தாங்க முடியாத படக்குழுவினர், அங்கு ஐஸ்கிரீமை வெளுத்துக் கட்டினர். இதையடுத்து சோழர்கள் சுவைத்த ஐஸ்கிரீம் என சோசியல் மீடியாவில் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. நடிகர் கார்த்தி ஒரு கட்டத்தில் ஐஸ்கிரீமை கத்தியாக பாவித்து ஷோபிதாவிடம் மல்லுக்கட்டினார். இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X