PS2 :கமலின் வாய்சில் வரலாற்றைத் துவங்கிய பொன்னியின் செல்வன் 2.. வீடியோ வெளியீடு!
சென்னை : நடிகர்கள் கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், இந்திய அளவில் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது.

இந்தப் படத்தின் பிரமோஷன்களும் மிகச்சிறப்பான வகையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர், நடிகைகள் படத்திற்கான பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர்.
சோழர்களின் வரலாற்றை துவக்கிய கமல்ஹாசன் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் அடுத்த வாரத்தில் பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியியில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் துவங்கிய படக்குழுவினரின் பிரமோஷனல் டூர், கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது.

தொடர்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஐதராபாத்தில் நாளைய தினம் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பாகத்திற்கு கொடுக்கப்பட்டது போலவே இரண்டாவது பாகத்திற்கும் அதிகமான பிரமோஷன்களை படக்குழுவினர் கொடுத்துள்ளனர். கடந்த இரு மாதங்களாகவே பல்வேறு சிறப்பான விஷயங்களை பிரமோஷன்களாக கொடுத்து வருகின்றனர். படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு, படத்தின் ஆன்த்தம் என அடுத்தடுத்த சிறப்பான விஷயங்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் படத்தின் நடிகர், நடிகைகள் இந்தியா முழுவதிலும் படத்திற்காக கொடுத்த பிரமோஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஒவ்வொரு இடத்திலும் அவர்களின் காஸ்ட்யூம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களின் தொடர் புகைப்படங்கள், வீடியோக்களை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் இன்ட்ரோவாக கமல் கொடுத்திருந்த வாய்ஸ்ஓவர் மிக சிறப்பாக அமைந்தது.
அதேபோல இரண்டாவது பாகத்திலும் கமலின் வாய்ஸ் ஓவர் உள்ளதாக முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் மணிரத்னம் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், படக்குழுவினர் இன்று மதியம் வெளியிட்ட வீடியோவில், கமலின் வாய்ஸ் ஓவர் காணப்பட்டது. சோழர்களின் வரலாற்றை துவக்கி வைக்கும் வகையில் அந்த வீடியோ காணப்பட்டது. இதைக் கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.

இதனிடையே இது பெரிய சர்ப்பிரைஸ்தான் என்று ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர். முந்தைய பாகத்தில் கமல்தான் வாய்ஸ் கொடுத்திருந்தார் என்பதால், இதில் எந்த சர்ப்பிரைசும் இல்லை என்று அவர்கள் தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். ஜிபி முத்து உள்ளிட்டவர்களை வைத்து ரசிகர்கள் புதிய மீம்ஸ்களை வெளியிட்டு படக்குழுவினரை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











