PS2 team :பிரமோஷனல் டூரை துவங்கிய சோழர்கள்.. பயண புகைப்படத்தை வெளியிட்ட லைகா!

சென்னை : நடிகர்கள் கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகி பட்டையை கிளப்பியது. படத்தின் இரண்டு பாகங்களையும் 155 நாட்களில் மணிரத்னம் சூட் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

Ponniyin selvan 2 team starts their Promotional tour to Coimbatore

முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து சில மாதங்களிலேயே இரண்டாவது பாகமும் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 பிரமோஷனல் டூர் : நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜெக்ட்டான பொன்னியின் செல்வன், அவரது நீண்ட முயற்சியில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் முன்னதாக விஜய் உள்ளிட்டவர்களை வைத்து மணிரத்னம் இயக்க முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Ponniyin selvan 2 team starts their Promotional tour to Coimbatore

பொன்னியின் செல்வன் புதினம், அமரர் கல்கியின் படைப்பில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாவல் ரசிகர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அந்த வகையில், பலரும் இந்த புதினத்தை திரையில் காட்சிப்படுத்த முயற்சித்த நிலையில், தற்போது மணிரத்னத்திற்கு அது சாத்தியப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே படத்தின் இரண்டாவது பாகம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷன்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே துவங்கியுள்ளன. அடுத்தடுத்து வந்தியத்தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன் ஆகியோரின் கேரக்டர்கள் குறித்து படக்குழுவினர் வீடியோ வெளியிட்டனர்.

படத்தின் இசை மற்றும் ட்ரெயிலரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், நேற்றைய தினம் படத்தின் ஆன்த்தமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்றைய தினமே படத்தின் பிரமோஷனல் டூர் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூரில் துவங்கவுள்ள இந்த டூர், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் பயணமாகி, திருச்சியில் நிறைவுறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் நடிகர்கள் தங்களது பிரமோஷனல் டூரை துவங்கியுள்ளனர்.

Ponniyin selvan 2 team starts their Promotional tour to Coimbatore

தனி விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு இவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளது. தங்களது அடுத்த கோட்டையை அமைக்க கோயம்புத்தூருக்கு சோழர்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஷோபிதா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X