PS 2 Box Office: பொன்னியின் செல்வன் 2 மொத்த வசூல் இவ்வளவு தானா... அப்போ அதெல்லாம் பொய்யா கோபால்!

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது.
லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் கடந்த மூன்று வாரங்களாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது.
ஆனால், தற்போது வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் உண்மையான வசூல் நிலவரம் மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan 2 Total Collection: Ponniyin Selvan 2 originally collected Rs 320 crores worldwide

பொன்னியின் செல்வன் 2 ஒரிஜினல் வசூல் நிலவரம்
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் கடந்த மாதம் இறுதியில் ரிலீஸானது. லைகா தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது.

அதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு பொன்னியின் செல்வன் 2-க்கு இல்லையென கூறப்படுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். விஷுவலாக பார்க்க படம் பிரம்மாண்டமாக இருந்தாலும், மேக்கிங், திரைக்கதை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை எனத் தெரிகிறது.

Ponniyin Selvan 2 Total Collection: Ponniyin Selvan 2 originally collected Rs 320 crores worldwide

அதேநேரம், பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் முன்பே, ரசிகர்களிடம் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ஒரிஜினல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் இதுவரை 321 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாம். இது எதிர்பார்த்ததை விட ரொம்பவே குறைவு என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் 130 முதல் 150 கோடியும், உலகம் முழுவதும் மொத்தமாக 300 முதல் 321 கோடி வரையும் வசூலித்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சம்மர் விடுமுறை என்பதால் அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வருவதால், பொன்னியின் செல்வன் 2 வசூல் இனி அதிகரிக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

முக்கியமாக முதல் பாகத்தைப் போல 500 கோடியெல்லாம் வசூலிக்க சுத்தமாக வாய்ப்பே கிடையாது எனவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானபோது, அடிக்கடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்தது. ஆனால், இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்கவில்லை என்பதால் படக்குழுவே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Ponniyin Selvan 2 Total Collection: Ponniyin Selvan 2 originally collected Rs 320 crores worldwide

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஷோபிதா துலிபலா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், ரஹ்மான், விக்ரம் பிரபு என மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளத்துடன் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவலுக்கும் படத்துக்கும் வித்தியாசம் இருப்பதே, ரசிகர்களிடம் வரவேற்புக் குறைய காரணம் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X