PS 2 ட்ரெய்லர் ரன்னிங் டைம்மே இவ்ளோன்னா மொத்த படமும்..? மணிரத்னம் அதிரடி... இணைகிறாரா கமல்?

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், அக நக என்ற முதல் பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெடியானது பொன்னியின் செல்வன் 2

ரெடியானது பொன்னியின் செல்வன் 2

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தப் படம், ஹிஸ்டாரிக்கல் ஜானரில் இருந்ததால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதுமட்டும் இல்லாமல் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாகவும் ரிலீஸாகி இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் 2ம் பாகமும் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் 2ம் ரிலீஸாக உள்ளதால் அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கிவிட்டது. முதலாவதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'அக நக' பாடல் இருதினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ட்ரெய்லர் ரன்னிங் டைம்

ட்ரெய்லர் ரன்னிங் டைம்

'பொன்னி நதி' புகழ் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய 'அக நக' பாடலை சக்திஸ்ரீ பாடியிருந்தார். இதன் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாம். முதல் பாகத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா போன்று, இதுவும் பிரம்மாண்டமாக நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் ரன்னிங் டைம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த ட்ரெய்லர் 3.24 நிமிடங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் ட்ரெய்லரும் இதே நீளம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் நீளமும் 3 மணி நேரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் கமல்

மீண்டும் இணையும் கமல்

இருதினங்களுக்கு முன்னர் ஏஆர் ரஹ்மானும் மணிரத்னமும் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு பின்னணி இசையமைக்கும் பணிகளில் பிஸியாக இருக்கும் போட்டோஸ் வெளியாகியிருந்தது. அதேபோல் லண்டனில் உள்ள ஸ்டூடியோவின் முன்னால் நிற்கும் போட்டோவையும் ஏஆர் ரஹ்மான் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், முதல் பாகத்தின் ட்ரெய்லரில் கமலின் வாய்ஸ் ஓவரில் பொன்னியின் செல்வன் கதையை விவரித்திருப்பார் மணிரத்னம். இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரும் அதேபோல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினி, கமல், பாரதிராஜா

ரஜினி, கமல், பாரதிராஜா

அதன்படி பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரிலும் கமலின் வாய்ஸ் ஓவர் தான் ஸ்பெஷலாக இருக்குமாம். அதுமட்டும் இல்லாமல் ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசையும் வேற லெவலில் இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி, கமல், இயக்குநர் ஷங்கர் உள்ள்ட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோல், இரண்டாம் பாகத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் களைக்கட்டும் என சொல்லப்படுகிறது. இந்தமுறை இயக்குநர் பாரதிராஜாவும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X